ETV Bharat / state

பாபர் மசூதி இடிப்பு தினம் பாதுகாப்புக்காக கோவையில் 2000 போலீஸ் குவிப்பு!

author img

By

Published : Dec 6, 2019, 5:50 PM IST

Babri Mosque Demolition Day
கோவையில் 2000 போலீஸ் குவிப்பு

கோவை: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, இன்று கோவை மாவட்டம் முழுவதும் ஏடிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் சுமார் 2 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அயோத்தி நிலம் குறித்துத் தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து, பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் மக்கள் கூடும் பொது இடங்களில் பலத்தப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்டத்தில் ஏடிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில், சுமார் 2 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் . கோவை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, மோப்ப நாய்களுடன் விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் 2000 போலீஸ் குவிப்பு

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரயில்வே காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் கூறுகையில்," கோவை ரயில் நிலையத்தில் 200 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விதியை மீறி, ரயில் பாதைகளில் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆபத்தான இடங்களில் மக்கள் செல்ஃபி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ரயில் பாதைகளில் மது அருந்துவதைத் தடுப்பதற்கு ரயில் பாதைக்கு அருகே உள்ள மதுக்கடைகளைக் கண்டறிந்து அவற்றை இடமாற்றம் செய்யக்கோரி, மாவட்ட ஆட்சியர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளோம். தற்போது, ரயில்வே காவல் துறையில் 20 விழுக்காடு காவலர்கள் பற்றாக்குறை உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: சத்தீஷ்கரில் நடன மங்கை கூட்டு பாலியல் வன்புணர்வு.!

Intro:பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று கோவை மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் ஏடிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் போலீஸ் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது


Body:பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் ஆறாம் தேதி முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது அயோத்தி நிலம் குறித்து தீர்ப்பு வந்ததை அடுத்து பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் ஏடிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையம் பேருந்து நிலையம் விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் கோவை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மேலும் மோப்ப நாய்களை கொண்டு விமான நிலையம் முழுவதும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் கோவை மாநகரில் உக்கடம் கரும்பு கடை காந்திபுரம் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரயில்வே காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன்
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது கோவை ரயில் நிலையத்தில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார் மேலும் விதி மீறி ரயில் பாதைகளை கிடப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் வதாகவும் சென்னையில் ரயில் மோதி உயிர் இழப்புகள் ஏற்படுவது அதிகமாக உள்ளது எனவும் ஆபத்தான இடங்களில் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டுமென கேட்டுக் கொண்ட அவர் ச பெரிய ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில் பாதைகளில் மது அருந்துவதை தடுக்க ரயில் பாதைக்கு அருகே உள்ள மதுக்கடைகளை கண்டறிந்து அவற்றை இடமாற்றம் செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுத உள்ளதாக தெரிவித்த அவர் ரயில்களில் பெண்களின் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார் ரயில்வே காவல் துறையில் 20 சதவீதம் காவலர்கள் பற்றாக்குறையை உள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார்..


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.