ETV Bharat / state

50% காலியாக உள்ள பார்வை மாற்றுத்திறனாளிகள் பள்ளி ஆசிரியர் பணிகள் - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Jul 26, 2023, 6:45 AM IST

தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
50% காலியாக உள்ள பார்வை மாற்றுத்திறனாளிகள் பள்ளி ஆசிரியர் பணிகள்

தமிழ்நாடு முழுவதும் உள்ள பார்வை மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பள்ளிகளில் உள்ள காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு தாக்கல் செய்த மனுவை இன்று சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளித்தது.

சென்னை: தமிழ்நாட்டில் சென்னையை அடுத்த பூந்தமல்லி, திருச்சி, தஞ்சாவூர், சேலம், மதுரை புதுக்கோட்டை, சிவகங்கை, கோவை, தருமபுரி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இந்த பள்ளிகளில் முதல்வர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என 50 சதவீதத்துக்கும் மேல் காலியாக இருப்பதாக கூறி, வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மொத்தம் உள்ள 10 பள்ளிகளில் ஐந்து பள்ளிகளில் முதல்வர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், 14 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் ஐந்து ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை போன்று 20 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 10 பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், 74 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் 61 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "மணிப்பூர் விவகாரத்தில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்க தயார்" - மத்திய அமைச்சர் அமித் ஷா!

இந்த பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரி எவரும் நியமிக்கப்படவில்லை எனவும், காலிப்பணியிடங்களை நிரப்பாததால் பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இருப்பினும் இதனை அரசு கண்டு கொள்ளவில்லை எனவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

கல்வி உரிமைச் சட்டத்தின்படி பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, வருகிற அக்டோபர் 10ஆம் தேதிக்குள் பதிலளிக்கும் படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: Vellore: சரிவர மூடப்படாத பாதாளச் சாக்கடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் - பொதுமக்கள் பெரும் அவதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.