ETV Bharat / state

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. 2வது நாளாக குறைந்த தங்கத்தின் விலை - எவ்வளவு தெரியுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 3:44 PM IST

தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்

Gold Rate Today: சென்னையில் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வந்த தங்கத்தின் விலையானது தற்போது குறைந்துள்ளது. இதுவே தங்கம் வாங்க சரியான நேரம் என தங்க முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.

சென்னை: இந்திய மக்களுக்கு சேமிப்பு என்றாலே, மனதில் முதலில் தோன்றும் முதல் விஷயம் தங்கம்தான். தங்கத்திற்கு எப்போதும் தனி மதிப்பு உண்டு. முக்கியமாக நடுத்தர, பாமர மக்களுக்கு அத்தியாவசிய, எதிர்கால தேவைக்கு கைகொடுக்கும் ஒரு முக்கிய உதவுகோலாக தங்கம் விளங்கி வருகிறது. கையில் ஒரு 10 ஆயிரம் இருந்தால் கூட ஒரு 1 கிராம் வாங்கி விடலாமா? இது நம் குழந்தையின் எதிர்காலத்துக்கு தேவைப்படும், வீடு கட்டத் தேவைப்படும் போன்ற பல எண்ணங்கள் தோன்றும்.

அப்படிப்பட்ட தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதாரச் சூழலில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. ஆகையினால்தான் தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, நேற்று (செப்-22) குறைந்தது. அதைத் தொடர்ந்து, மீண்டும் 2வது நாளாக இன்றும் தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை: தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரன் ரூபாய் 560 வரை உயர்ந்தது. இந்த தொடர் விலையேற்றம் நகை வாங்குவோருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதைத் தொடர்ந்து தற்போது தங்கத்தின் விலையானது, இறங்கு முகமாவே இருந்து வருகிறது. இன்று காலை கமாட்டி மார்க்கெட் தொடங்கிய நிலையில், தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது, மீண்டும் விலை குறைந்துள்ளது.

வெள்ளி விலை உயர்வா? 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூபாய் 160 குறைந்து ரூபாய் 44,080க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 22 கேரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூபாய் 20 குறைந்து ரூபாய் 5,510க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூபாய் 1 உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 79க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூபாய் 100 உயர்ந்து, 79,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் ரூபாய் 5980 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இன்றைய விலை நிலவரம் - (செப் - 22)

  • 1 கிராம் தங்கம்(22-கேரட்) - ரூ.5,510
  • 1 சவரன் தங்கம் (22-கேரட்) - ரூ.44,080
  • 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.5,980
  • 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.47,840
  • 1 கிராம் வெள்ளி - ரூ.79.00
  • 1 கிலோ வெள்ளி - ரூ.79,000

இதையும் படிங்க: அப்படி என்ன வசதி இருக்கு சென்னை டூ நெல்லை வந்தே பாரத் ரயிலில்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.