ETV Bharat / state

6.64 லட்சம் கோடி முதலீடுகள்; 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 7:09 PM IST

Global Investors Meet
உலக முதலீட்டாளர் மாநாடு

MK Stalin:உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 6,64,180 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் சுமார் 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை: நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று(ஜன.07) தொடங்கியது. இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டின் முதல் நாளான நேற்று ரூ.50,634 கோடி முதலீட்டுக்கான புதிய ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் 49,550 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மாநாட்டின் நிறைவு நாளான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, ”இரண்டு நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர் மாநாடு தமிழகத்தின் 20 ஆண்டு கால வளர்ச்சிக்கு அடித்தளம் மிட்டுள்ளது. அமைச்சராக பொறுபேற்ற குறுகிய காலத்தில், இந்தியாவே உற்று நோக்கும் வகையில் பிரம்மாண்டமான முறையில் மாநாட்டை நடத்தியதாக அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு ’முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு’ என்ற தலைப்பில் நடத்தப்பட மாநாட்டின் மூலமாக 1 லட்சத்து 90 ஆயிரத்து 800 கோடிகளுக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. இதன் மூலம் 2,80,600 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.இது வரை 40 தொழிற்சாலைகளுக்கு அடித்தளம் மீட்டுள்ளோம், 27 தொழிற்சாலைகளைத் திறந்து வைத்துள்ளோம். உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டின் மிகப்பெரிய பாய்சலாக அமையும், மேலும் தமிழக வரலாற்றில் நினைவு கூறப்படும் என்றார்.

மேலும், உலக அளவில் முதலீட்டிற்கான முதல் மாநிலமாகத் தமிழ்நாடு மாற வேண்டும் என நான் அதிகாரிகளுக்கு அன்பு கட்டளை ஈட்டோன். எங்களுடைய அயராத உழைப்பு மற்றும் அதிகாரிகளின் பங்களிப்பு காரணமாக 6,64,180 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் மாநாட்டில் எதிர்பார்த்ததை விட அதிக முதலீடுகள் கிடைத்துள்ளது. இதன் மூலம் 26,90,656 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளது. மேம்பட்ட மின்னணுவியல் உற்பத்தி, பசுமை எரிசக்தி, தோல் அல்லாத காலணிகள், வாகனங்கள் மற்றும் மின் வாகனங்கள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, தரவு மையங்கள், திறன்மிகு மையங்கள் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற பலதரப்பட்ட துறைகள் மூலமாக இந்த முதலீடுகள் வந்திருக்கிறது.

2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்தியப் பொருளாதரத்திற்கும் மிக முக்கிய பங்களிக்கும் மாநிலமாகவும் மாற்றிட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இந்த இலக்கை விரைவில் அடைவதற்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெரும் துணை நிற்கும் என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், மிகப்பெரிய உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளும் போது அதற்கான முழு முதலீடுகளையும் அரசே மேற்கொள்ளுவது கடினம். கூட்டு முயற்சியில் தனியார் துறையுடன் இணைந்து செயல்படுவதுதான் நடைமுறையில் சாத்தியம்.

அப்படிபட்ட முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பொது மற்றும் தனியார் கூட்டண்மை கொள்கை( Public Private Partnership Policy) என்பதனை வெளியிட்டு இருக்கிறோம். அதேபோல் பன்னாட்டுத் நிறுவனங்களை (Venture Funds) தமிழ்நாட்டின் புத்தொழில் நிறுவனங்களோடு இணைப்பதற்கான தளம். இன்றைக்கு தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த மாநாட்டை 20 ஆயிரம் பிரநிதிகள் மற்றும் 39 லட்சம் மாணவர்கள் பார்த்து பயன்பெற்றுள்ளனர். உலக முதலீட்டாளர்களில் மாநாட்டில் நடைப்பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்படும்” இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு எதிரான மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கள்: மாலத்தீவு வெளியுறவுத் துறை விளக்கம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.