ETV Bharat / state

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு - கடும் சோதனைக்குப் பின்னர் அனுமதி!

author img

By

Published : Sep 27, 2019, 10:33 AM IST

Updated : Sep 27, 2019, 11:37 AM IST

சென்னை: கோடம்பாக்கத்தில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுத வந்தவர்கள் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

post-graduate-teacher

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று ஆகிய தேர்விற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விநியோகிக்கப்பட்டது. இதில், இரண்டாயிரத்து 144 காலிப்பணியிடங்களுக்கு சுமார் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 463 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களுக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதம் 27, 28, 29 ஆகிய தேதிகளில் ஆன்லைன் மூலம் நடத்தப்போவதாக பள்ளிக்கல்வித் துறை முன்னதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் 154 மையங்களில் இத்தேர்வானது இன்று(செப்-27) தொடங்கியது. குறிப்பாக இன்று நடைபெறும் இயற்பியல் தேர்வை, கோடம்பாக்கம் தேர்வு மையத்தில் எழுத வந்த தேர்வர்கள் கடுமையான சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுத வந்தவர்கள் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதி

மேலும், சோதனையில் பெண் தேர்வர்களின் கம்மல், மூக்குத்தி, கொலுசு போன்ற ஆபரணங்களை கழற்றிய பின்னர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஹால் டிக்கெட்டில் விதிமுறைகள் விளக்கப்பட்டிருந்தும்; அதனை முழுமையாக படிக்காமல் தேர்வெழுத வந்துள்ளனர் என பறக்கும் படையினர் வருத்தம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

முதுகலை ஆசிரியர் தேர்வு - பதற்றமான மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு

Intro:முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு
கடும் சோதனைக்கு பின்னர் அனுமதி


Body:முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு
கடும் சோதனைக்கு பின்னர் அனுமதி
சென்னை,
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுத வந்தவர்கள் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும் கோடம்பாக்கத்தில் அமைந்திருந்த தேர்வு மையத்தில் பெண்களின் காதுகளில் இருந்த கம்மல், கொலுசு போன்றவற்றை அகற்றிய பின்னர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.


தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் 24 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 15 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டது.

இந்த அறிவிப்பின் மூலம் 2144 முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்று ஆகிய பணியிடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். து.

முதுகலை ஆசிரியர் பணி மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 பணிக்கு சுமார் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 463 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான எழுத்து தேர்வு செப்டம்பர் மாதம் 27 ,28,29 ம் தேதி ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் 154 மையங்களில் மூன்று நாட்கள் தேர்வு நடத்தப்படுகிறது.

செப்டம்பர் 27 ந் தேதி இயற்பியல் பாடத்திற்கான காலை 9 மணி முதல் 12 மணிவரை தேர்வு நடைபெறுகிறது. இயற்பியல் தேர்வினை எழுதுவதற்கு 14 ஆயிரத்து 380 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்விற்கான நுழைவுச்சீட்டு அவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தெளிவாக ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்துள்ளது.
அதில் குறிப்பாக ஆபரணங்கள், மின்சாதனப் பொருட்கள் போன்றவை அனுமதிக்கப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமாக தேர்வர்கள் பயோமெட்ரிக் மூலம் அவர்களின் வருகைப் பதிவை உறுதி செய்த பின்னரே அவர்களுக்கு உரிய ஆன்லைன் தேர்வு வினாத்தாள்கள் வெளியாகும். எனவே தேர்வர்கள் அனைவரும் தேர்வு மையத்தில் உள்ள பயோமெட்ரிக் கருவியில் தங்களது வருகையை பதிவு செய்த பின்னர் அவர்களுக்குத் கம்ப்யூட்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நுங்கம்பாக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தினை பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆய்வு செய்தார்.


சென்னை கோடம்பாக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த தெருவிலிருந்த கம்மல், மூக்குத்தி, கொலுசு போன்ற ஆபரணங்களை கழற்றிய பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் அவர்களுக்கு உரிய ஹால் டிக்கெட்டில் உள்ள விதிமுறைகளை கூட முழுமையாக படிக்காமல் வந்து தேர்வு எழுத வந்துள்ளனர் என்பது வருத்தமாக உள்ளது.





Conclusion:
Last Updated :Sep 27, 2019, 11:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.