ETV Bharat / state

முதுகலை ஆசிரியர் தேர்வு - பதற்றமான மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு

author img

By

Published : Sep 22, 2019, 12:25 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வின் போது பதற்றமான  மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

tet exam

தமிழ்நாட்டில் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று ஆகிய தேர்வில் 2 ஆயிரத்து 144 காலிபணியிடங்களுக்கு 1 லட்சத்து 85 ஆயிரத்து 463 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படவுள்ளது.

இதில், முதுகலை ஆசிரியர் பணிக்கான ஆன்லைன் தேர்வு வரும் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் 154 மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இத்தேர்வில், அதிகபட்சமாக தமிழ் பாடத்தை 33 ஆயிரத்து 702 பேரும், ஆங்கில பாடத்தை 32 ஆயிரத்து 387 பேரும், வேதியியல் பாடத்தை 14 ஆயிரத்து 502 பேரும். வணிகவியல் 14 ஆயிரத்து 862 பேரும், இயற்பியல் பாடத்தை 14 ஆயிரத்து 372 பேரும், இந்திய கலசாரத் தேர்வினை 11 ஆயிரம் பேரும் எழுதுகின்றனர்.

இந்நிலையில், ஜூன் மாதம் முதன்முறையாக நடைபெற்ற பள்ளி ஆசிரியர் பணிக்கான தேர்வின் போது, தேர்வு மையத்தில் தேர்வர்கள் சிலர் தவறான நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

எனவே இத்தேர்வில் அவற்றை தவிர்க்கும் நோக்குடன், பதற்றமான மாவட்டங்களான கோயம்புத்தூர், நாமக்கல், ஈரோடு, தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களிலுள்ள தேர்வு மையங்களில், கூடுதலாகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்டக் காவல் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Intro:10 மாவட்டங்கள் பதற்றமானவை
கூடுதல் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கைBody:10 மாவட்டங்கள் பதற்றமானவை
கூடுதல் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை

சென்னை,
தமிழகத்தில் நடைபெற உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கான தேர்வின் போது 10 மாவட்டங்கள் பதற்றமானவை எனவும், கூடுதல் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு தெரிவித்துள்ளது.

முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை 1 ஆகியவற்றில் 2ஆயிரத்து 144 காலிபணியிடங்களுக்கு 1லட்சத்து 85ஆயிரத்து 463பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.இவர்களுக்கான எழுத்துத் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட உள்ளது. இவர்களுக்கான ஆன்லைன் தேர்வு 27 ந் தேதி முதல் 29ந் தேதி வரை  முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ளது. இந்த தேர்வினை தமிழகத்தில் 154மையங்களில் கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைனில் நடத்துக்கிறது.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 17பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது..
அதிகபட்சமாக தமிழ் பாடத்தை 33ஆயிரத்து  702பேரும், ஆங்கில பாடத்தை 32 ஆயிரத்து 387பேரும்,
வேதியியல் 14ஆயிரத்து 502பேரும். வணிகவியல் 14ஆயிரத்து 862பேரும், இயற்பியல் பாடத்தினை 14,372 பேரும், இந்திய கலச்சாரத்தினை 11 பேரும் எழுதுகின்றனர். இந்த தேர்விற்கான ஹால்டிக்கெட்டுகளை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

ஆன்லைன் வழித் தேர்விற்கான வினாக்கள் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டரில் வரிசையாக 1 முதல் 150 கேள்விகள் கம்ப்யூட்டர் திரையில் தெரியும். தேர்வர்கள் ஒவ்வொரு வினாவாகவோ, வரிசையாகவோ அல்லது முன்னும் பின்னுமாகவோ தேர்வெழுத வகை செய்யப்பட்டள்ளது. இறுதியாக உறுதி செய்தப்பின் விடைக்குறிப்பினை பதிவேற்றம் செய்திடவும், முழுத்தேர்வும் முடிந்தப்பின்னர் இறுதியாக அனைத்து வினாக்களுக்கு உரிய விடைகளையும் பதிவேற்றம் செய்திடும் வகையிலும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் முன் அனுபவம் பெறும் வகையில் பயிற்சி தேர்விற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தேர்வு நாளன்று காலையில் தேர்வு எழுதுபவர்கள் காலை 8.30 மணிக்குள்ளும், மதியம் தேர்வு எழுதுபவர்கள் 12.30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் வர வேண்டும். அதற்கு பின் வரும் தேர்வர்கள் தேர்வெழுத அனுமதிக்கபட மாட்டார்கள் தேர்வறையில் தேர்வர்கள் செல்போன் உள்ளிட்ட மின்னனு சாதனைகளை  பயன்படுத்த கூடாது உள்ளிட்ட கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது .

தமிழகத்தில் முதன்முறையாக நடைபெற்ற முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கான தேர்வின் போது தேர்வு மையத்தில் தேர்வர்கள் சிலர் தவறான நடவடிக்கையில் ஈடுப்பட்டதால் இந்த ஆண்டு கோயம்புத்தூர், நாமக்கல், ஈரோடு, தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 500 தேர்வர்களுக்கு கூடுதலாக தேர்வு நடைபெறும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் காவல் துறைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.