ETV Bharat / state

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள்

author img

By

Published : Mar 1, 2023, 12:00 PM IST

தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் பிரமுகர்கள்
தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் பிரமுகர்கள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச். 3) 70ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளுக்கு அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

  • Birthday greetings to Tamil Nadu CM Thiru @mkstalin Ji. May he be blessed with a long and healthy life.

    — Narendra Modi (@narendramodi) March 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேபோல, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவில், “70ஆவது பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

  • 70வது பிறந்தநாள் காணும் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.@CMOTamilnadu

    — RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) March 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக ஸ்டாலினை தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதேபோல, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது வாழ்த்து செய்தியில், எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, நல்ல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கிடைத்திடவும், மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிடவும் வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.