ETV Bharat / state

வட, தென் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

author img

By

Published : Nov 18, 2020, 1:47 PM IST

தமிழ்நாட்டில் மழை
தமிழ்நாட்டில் மழை

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் வட, தென் தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மழைப் பொழிவு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கன்னியாகுமரிக் கடல் பகுதியில் நிலவும் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 (18.11.2020) மணி நேரத்தில் தென் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடுதம்.

அதேபோல், அடுத்த 48 (19.11.2020) மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக (சென்டிமீட்டரில்) காயல்பட்டினம் (தூத்துக்குடி) 21, பரமக்குடி (ராமநாதபுரம்) 13, பாபநாசம் (திருநெல்வேலி ) 12, தேவகோட்டை (சிவகங்கை), கொட்டாரம் (கன்யாகுமரி) தலா 10, கொடைக்கானல் (திண்டுக்கல்), அரிமளம் (புதுக்கோட்டை), சிவகாசி (விருதுநகர்), காரைக்குடி தலா 9, நன்னிலம் (திருவாரூர்), சிவகிரி (தென்காசி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), கூடலூர் (தேனி), திருச்செந்தூர் தலா 8, குன்னூர் (நீலகிரி), பேரையூர் (மதுரை), தாராபுரம் (திருப்பூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர் ), மணிமுத்தாறு (திருநெல்வேலி ) தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை இன்று (நவம்பர் 18) கேரளா, கர்நாடகா கடற்பகுதி, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை (நவம்பர் 19) லட்சத்தீவு கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மிக பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் நேற்று 742.90 மி.மீ மழை பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.