ETV Bharat / state

tneb aadhaar link :மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க இன்றே கடைசி நாள்!

author img

By

Published : Feb 15, 2023, 12:56 PM IST

Etv Bharat
Etv Bharat

மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இன்று மாலைக்குள் இணைக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை: மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் முடியும் நிலையில் இன்று (பிப்.) மாலைக்குள் விரைந்து இணைத்திட வேண்டுகிறேன் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், துவங்கப்பட்ட மின் இணைப்புடன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், நேற்று மாலை வரை 2.59 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இது மொத்தமுள்ள 2.67 கோடி வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி & விவசாய இணைப்புகளில் 97.07% ஆகும். இதுவரை இணைத்திடாதவர்கள், கடைசி நாளான இன்று மாலைக்குள் விரைந்து இணைத்திட வேண்டுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரத்துறையில் உள்ள முறைகேடுகளை சீரமைப்பதற்காக மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. மேலும், இதன் மூலம் மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் முடியும் என மின்சார வாரியம் மற்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கானப் பணிகளை கடந்த ஆண்டு நவ.15ஆம் தேதி மின்சார வாரியம் தொடங்கியது. இதற்காக 2000-க்கும் மேற்பட்ட சேவை மையங்கள் அமைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் வீட்டு மின் நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். இவர்களுக்கு 100 யூனிட் மின்சாரம் மானியம் உள்ளது.

மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மானியம் ரத்து செய்யப்படும் என குற்றச்சாட்டு எழுந்தது. முக்கியமாக வாடகை வீடு வைத்திருப்போர் என்ன செய்வது, அதிகளவில் மின் இணைப்பு வைத்திருப்போர் என்ன செய்வது போன்ற பல சந்தேகங்களும் எழுந்தன. இதற்கு வாடகை வீட்டில் வசிப்போர் வீட்டு உரிமையாளர் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம் எனவும் எத்தனை மின் இணைப்பு இருந்தாலும் அனைத்திற்கும் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் என மின்சார வாரியம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. குறிப்பாக, இந்த இணைப்பின் மூலம் 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

  • மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், துவங்கப்பட்ட மின் இணைப்புடன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், நேற்று மாலை வரை 2.59 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. (1/2) pic.twitter.com/GKF8AtoTKh

    — V.Senthilbalaji (@V_Senthilbalaji) February 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், அதற்கும் பின்பும் இந்த ஆண்டு ஜன.31ஆம் தேதி வரையிலும், பின்னர் பிப்.15ஆம் தேதி வரையிலும் என இரண்டு முறை கால அவகாசம் வழங்கப்பட்டது. பிப்.15ஆம் தேதி வரை இணைக்கலாம் என்று கால அவகாசம் வழங்கும் போது அதற்கு மேல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என மின்சார வாரியம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக மேலும் கால அவகாசம் வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க: 9 வயதில் காணாமல் போன சிறுவன் ஆதார் மூலம் 15 வயதில் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.