ETV Bharat / state

சென்னையில் மீண்டும் உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 1:52 PM IST

Gold Rate on October 24
சென்னையில் மீண்டும் உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை

Gold Rate on October 24: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே உருவாகியுள்ள போரின் எதிரொலியாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.45,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: இஸ்ரேல் போர் தாக்கத்தால் தங்கம் விலையில் தினமும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகின்றன. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.45,400-க்கு விற்பனை ஆகின்றன. தங்கத்தின் விலையானது சர்வதேசப் பொருளாதாரச் சூழலில் மத்தியில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இது மட்டுமின்றி சர்வவேதச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்காவின் வங்கிகளின் வட்டி விகிதம் என்று பல்வேறு காரணங்களை முன் வைத்து தான் தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே உருவாகியுள்ள போரின் எதிரொலியாகக் கடந்த 12 நாட்களாகத் தங்கத்தின் விலை தினமும் ஏற்றமும் இறக்கமுமாக இருந்து வருகிறது.

தங்கத்தின் விலையானது அக்டோபர் 20ஆம் தேதி அன்று திடீரென அதிரடியாக உயர்வைச் சந்தித்தது. இன்று (அக்.24) காலை கமாடிட்டி மார்க்கெட் தொடங்கிய நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு 4.83 டாலர் உயர்ந்து 1,979.63 டாலராக இருந்து வருகிறது.

இந்த விலை ஏற்றம், இந்திய உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இதன் காணரனமாக, தங்கத்தின் விலையானது இன்று (அக் 24) சவரனுக்கு ரூ120 வரை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.15 அதிகரித்து, 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.5,675க்கும் ஒரு சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.45,400க்கும் விற்பனை நடைபெற்று வருகிறது.

இதே போல், வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளிக்கு ரூ.500 குறைந்து ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.78,000க்கும் விற்பனை நடைபெற்று வருகிறது.

இன்றைய (அக்-24) நிலவரப்படி தங்கத்தின் விலை:

  • 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,685
  • 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.45,400
  • 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.6,145
  • 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.49,160
  • 1 கிராம் வெள்ளி - ரூ.78.00
  • 1 கிலோ வெள்ளி - ரூ.78,000
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.