ETV Bharat / state

ஸ்டாலினுக்கு பொய் பேசுவதற்கான நோபல் பரிசு வழங்குக - எடப்பாடியின் நக்கல் பரிந்துரை

author img

By

Published : Feb 9, 2022, 5:04 PM IST

ஸ்டாலினுக்கு பொய் பேசுவதற்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் - எடப்பாடி வேண்டுகோள் OR தாம்பரம் மாநகராட்சி முதல் மேயராக அதிமுக வேட்பாளர் வர வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலினுக்கு பொய் பேசுவதற்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் - எடப்பாடி வேண்டுகோள் OR தாம்பரம் மாநகராட்சி முதல் மேயராக அதிமுக வேட்பாளர் வர வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

70 விழுக்காடு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாகப் பொய் கூறிவரும் ஸ்டாலினுக்குப் பொய் பேசுவதற்கான நோபல் பரிசு வழங்க வேண்டும். மக்களிடம் திமுகவின் செயலற்ற ஆட்சியையும், அதிமுகவின் நலத்திட்டங்களையும் எடுத்துரைத்துத் தேர்தலில் வெற்றிபெற்று தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயர் பொறுப்பில் அதிமுக வேட்பாளர் அமர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை: தாம்பரம் மாநகராட்சியின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சேலையூரில் நடைபெற்ற அக்கட்சி நிர்வாகிகளுடனான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசிய அவர், "70 விழுக்காடு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாகப் பொய் கூறிவரும் ஸ்டாலினுக்குப் பொய் பேசுவதற்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்.

தாம்பரம் மாநகராட்சி முதல் மேயராக அதிமுக வேட்பாளர் வர வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
தாம்பரம் மாநகராட்சி முதல் மேயராக அதிமுக வேட்பாளர் வர வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

புழு விளையாடும் கோதுமை, ஒழுகி ஊற்றும் வெல்லம், பல்லி செத்த புளி போன்ற பொருள்களை மக்களுக்கு வழங்கி உள்ளனர். ஊழல் செய்யவே பொங்கல் தொகுப்பு வழங்கி தரமற்ற பொருள்களால் 500 கோடி லாபம் ஈட்டிள்ளனர்.

மேலும், தேர்தலுக்கு முன்பு நீட் தேர்வு ரத்துசெய்ய ரகசியம் ஒன்று இருப்பதாகத் தெரிவித்தவர்கள் ஏன் ரகசியத்தைப் பயன்படுத்தாமல் இப்போது தங்களை அழைக்கின்றனர் என வினா தொடுத்த அவர், அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நலத்திட்டங்களை ரிப்பன் வெட்டி ஸ்டாலின் தொடங்கிவைப்பதாகக் கூறினார்.

ஸ்டாலினுக்கு பொய் பேசுவதற்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் - எடப்பாடி நக்கல் பரிந்துரை

அதேபோல் அதிமுக ஆட்சியில் மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் திட்டம், ஏராளமான சிறு, குறு தொழில் நிறுவனங்கள், கால்வாய்கள் போன்ற பல்வேறு நலத் திட்டப்பணிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மக்களிடம் திமுகவின் செயலற்ற ஆட்சியையும், அதிமுகவின் நலத்திட்டங்களையும் எடுத்துரைத்துத் தேர்தலில் வெற்றிபெற்று தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயர் பொறுப்பில் அதிமுக வேட்பாளர் அமர வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: 'அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் சிம்மசொப்பனமாக திமுக திகழ்கிறது' - பரப்புரையில் உதயநிதி

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.