ETV Bharat / state

ரூ. 2 கோடி லஞ்சம்; மத்திய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை - சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 7:29 PM IST

மத்திய அரசு அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு
மத்திய அரசு அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

Chennai Special Court: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் மத்திய அரசு அதிகாரிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை: மத்திய அரசின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத் துறையின் குடியுரிமை பாதுகாப்பு அலுவலகம் சென்னை அசோக் நகரில் இயங்கி வருகிறது. வெளிநாடுகளுக்குச் சமையல் வேலை உட்படச் சிறு பணிகளுக்கு ஆட்களை அனுப்ப, தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் இந்த அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும்.

கடந்த 2007- 2009ம் ஆண்டுகளில் புலம்பெயர்ந்தோர் பாதுகாவலராக பணிபுரிந்த, இந்திய வருவாய் பணி அதிகாரி சேகர், குடியுரிமை சான்றுக்கு அனுமதி வழங்க, ரூபாய் 2 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றுள்ளதாகவும், அத்தொகையைச் சொத்துக்கள் வாங்கப் பயன்படுத்தியதாக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது.

சேகர் மற்றும் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட தனியார் டிராவல் ஏஜெண்ட் அன்வர் ஹுசைன் ஆகியோருக்கு எதிரான இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தனசேகரன், குற்றம் சாட்டப்பட்ட சேகர் மற்றும் அன்வர் ஹுசைன் மீதான குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகக் கூறி, இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: எப்போ பொங்கலிடணும்? பூஜை எப்படி செய்யணும்? முழு விவரத்தையும் தெரிஞ்சுக்கோங்க!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.