ETV Bharat / state

ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க பிரத்யேக இணையதம் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 1:30 PM IST

ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க இணையதள சேவை
அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னையில் ஆசிரியர்களின் குறைகளை தீர்ப்பதற்கான தனி இணையதளத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க இணையதள சேவை.

சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்களின் குறைகளை தீர்ப்பதற்கான, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இல்லா பணியாளர்களுக்கான குறைதீர் புலம் இணையதளத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (அக்.31) தலைமை செயலகத்தில் துவக்கி வைத்தார்.

பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 29 தட்டச்சர் பணியிடங்கள் மற்றும் 17 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள பணியாளர்களுக்கு, நேரடிக் கலந்தாய்வு மூலம் அவர்களுக்கு தேவையான பணியிடங்கள் தேர்வு செய்தனர். இந்நிலையில், இன்று அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமைச் செயலகத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இதையும் படிங்க: பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி குண்டர் சட்டத்தில் கைது? உயர்நீதிமன்றத்தில் மனைவி மனு தாக்கல்!

மேலும், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக 2,29,905 ஆசிரியர்கள் மற்றும் 29,909 ஆசிரியர் இல்லாத பணியாளர்களுக்கான பணிப் பலன் சார்ந்த கோரிக்கைகளை இணையதளம் மூலமாகவே விண்ணப்பிக்க ஏதுவாக, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இல்லா பணியாளர்களுக்கான குறைதீர் புலம் ( Staff Grievance Redressal Cell) என்ற இணையதளத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சசர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

இந்த இணையதளம் மூலம் ஆசிரியர்கள் தங்களின் குறைகளை பதிவு செய்தால், அதனை கல்வித்துறை அலுவலர்கள் சரிபார்த்து உடனடியாக தீர்வு காண வேண்டும். கோரிக்கை நிராகரிப்பதற்கான காரணத்தையும் குறிப்பிட நாட்களுக்குள் பதிவு செய்து திருப்பி அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 4 ஆண்டுகளுக்கு பின் ஆளுநர் மாளிகை முன் அகற்றப்பட்ட பேரி கார்டுகள்.. பொதுமக்கள் மகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.