சென்னை: கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அப்போது, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் மற்றும் அவரை எதிர்த்து திமுக சார்பில் வேட்பாளர் பழனியப்பனும் போட்டியிட்டனர். இதில், 23 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் பழனியப்பனை தோற்கடித்து விஜயபாஸ்கர் வெற்றி பெற்றார் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையும் படிங்க:ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பு.. தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!
ஆனால் விஜயபாஸ்கர் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வெற்றி பெற்றதாக திமுக வேட்பாளர் பழனியப்பன் குற்றச்சாட்டு முன்வைத்தார்.மேலும் அந்த தொகுதியை சேர்ந்த திமுக பிரமுகர்கள் பலரும் இதே குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதனை தொடர்ந்து, விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், விராலிமலை தொகுதி வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை வினியோகித்து ஊழல் நடைமுறைகளில் ஈடுபட்டு விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார் எனவும், அதனால் தேர்தல் ஆணைய விதிகளை மீறி விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவித்ததை செல்லாது என அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:Bike Taxi: தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு!
மேலும், வாக்காளர்களை கவர முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தேர்தல் ஆணையம் நிர்ணயித்ததற்கு அதிகமான தொகையை செலவு செய்துள்ளதாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகளில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார் பழனியப்பன். இந்நிலையில், தனக்கு எதிராக திமுக வேட்பாளர் பழனியப்பன் தாக்கல் செய்த இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தலைமையிலான அமர்வில், நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களை ஆராய்ந்த நீதிபதி, தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய விஜய்பாஸ்கர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து பழனிச்சாமி தொடர்ந்த பிரதான தேர்தல் வழக்கின் விசாரணையை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: "மதுவை ஒழிக்காமல் போதைப்பொருளை எப்படி ஒழிக்க முடியும்" ஏடிஜிபி சங்கர் முன்பு மாணவர் வேதனை பேச்சு!