ETV Bharat / state

ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பு.. தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

author img

By

Published : Jun 9, 2023, 5:07 PM IST

திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார்
திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார்

மேட்டூர் அணையில் இருந்து நடப்பாண்டு ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கு முன்னதாக டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் பார்வையிட்டார்.

தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின்

திருச்சி: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வரும் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் முன்னதாக டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் பார்வையிட்டு வருகிறார். இன்று காலை திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், திருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள கூழையாற்றில் ரூ.194.80 லட்சம் மதிப்பீட்டில் 7.79 கி.மீ தூரம் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

இவ்வடிகால் தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதால் மேட்டுப்பட்டி, திண்ணியம், செங்கரையூர் மற்றும் டி.கல்விக்குடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நிலங்கள் வெள்ள பாதிப்பில் இருந்து தடுக்கப்படும். இதனை தொடர்ந்து ஆலத்தூர் மற்றும் லால்குடி வட்டங்களில் அமைந்துள்ள இருதயபுரம் மற்றும் வெள்ளனூர் கிராமங்களில் நந்தியாற்றின் நீரோட்ட பாதையில் உள்ள முட்செடிகளை முழுவதுமாக அகற்றி அதனை 5.90 கி.மீ. நீளம் தூர்வாரி இரு பக்கக் கரைகளையும் பலப்படுத்திட ரூ.194.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

இதன் மூலம், ஊட்டத்தூர், நம்புக்குறிச்சி, பெருவளப்பூர், காணக்கிளியநல்லூர், வந்தலை கூடலூர், சங்கேந்தி மற்றும் வெள்ளனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 5,777 ஏக்கர் பாசனப் பரப்புகள் வெள்ள பாதிப்பிலிருந்து தடுக்கப்படும். இந்த தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டால், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசன வாய்க்கால்களில் உரிய நேரத்தில் கடைமடை வரை தங்குதடையின்றி சென்றடையவும். மேலும் வெள்ளக்காலங்களில் விரைவில் தண்ணீர் வடியவும் ஏதுவாக இருக்கும்.

பின்னர் முதலமைச்சர் லால்குடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஆலங்குடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணிபுரிபவர்களிடம் கலந்துரையாடி அவர்களுடைய கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். மேலும், கோரிக்கை மனுக்களை அளித்து தங்களது தேவைகளையும் தெரிவித்தனர்.

முன்னதாக இன்று காலை தஞ்சையில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட பின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், லால்குடி அருகே உள்ள பழையாற்றில் ரூ.23.50 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே உள்ள இருதயபுரம் வழியாக பாயும் நந்தியாற்றில் 1 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ள தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.

பின்னர், பெரம்பலூர் மாவட்டம் நந்தியாறு முழுவதுமாக தூர்வாரப்பட்டுள்ள நிலையில் தங்கு தடை இன்றி தண்ணீர் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பழனிமாணிக்கம், ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன், எ.சௌந்திரபாண்டியன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: "நீங்க உங்க வேலையை பாருங்க; நாங்க எங்க வேலையை பார்க்கிறோம்" - பிரஸ் மீட்டில் கடுப்பான திருச்சி எம்.பி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.