ETV Bharat / state

"நீங்க உங்க வேலையை பாருங்க; நாங்க எங்க வேலையை பார்க்கிறோம்" - பிரஸ் மீட்டில் கடுப்பான திருச்சி எம்.பி!

author img

By

Published : Jun 9, 2023, 9:31 AM IST

திருச்சி திருவெறும்பூர் ஐடிஐ பயிற்சிக் கல்லுாரியில், புதிய கட்டிடங்கள் திறப்பு மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. அதில் பங்கேற்ற திருச்சி எம்.பி., திருநாவுக்கரசர் அளித்து உள்ளார்.

ஐடிஐ பயிற்சிக் கல்லுாரி புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவில் பங்கேற்ற திருச்சி எம்.பி  திருநாவுக்கரசர்
ஐடிஐ பயிற்சிக் கல்லுாரி புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவில் பங்கேற்ற திருச்சி எம்.பி திருநாவுக்கரசர்

ஐடிஐ பயிற்சிக் கல்லுாரி புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவில் பங்கேற்ற திருச்சி எம்.பி திருநாவுக்கரசர்

திருச்சி: திருவெறும்பூர் ஐடிஐ பயிற்சிக் கல்லுாரியில், புதிய கட்டிடங்கள் திறப்பு மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. அதில் பங்கேற்ற திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "தமிழக அரசும், டாடா நிறுவனமும் இணைந்து, திருச்சி திருவெறும்பூரில் 1966 ல் துவங்கப்பட்ட அரசு பாலிடெக்னிக் கல்லுாரி (ஐடிஐ) உட்பட 22 கல்லூரிகளில் தலா 33 கோடி ரூபாய் முதலீட்டில், கட்டிடம் மற்றும் தொழில் பயிற்சி உபகரணங்கள் வழங்கி உள்ளன.

விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப தொழிற்பயிற்சி பெறும் வகையில், பாலிடெக்னிக் கல்லுாரிகளில் பல வசதிகள் செய்யப்படுகின்றன. மேலும், திருச்சி - தஞ்சாவூர் சாலையில் அரியமங்கலம் பகுதியில் சர்வீஸ் சாலை அமைப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மாநில அரசின் கோரிக்கை மற்றும் வியாபாரிகளின் நலன் கருதி, மத்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் விளைபொருட்களுக்கு ஆதார விலை அறிவிக்கப்படும்.

விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைக்க, ஆதார விலை அறிவிப்பு அவசியம். அதே சமயம், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது. திருவெறும்பூரில் உள்ள பெல் நிறுவனத்தில் பாய்லர் தயாரிப்பு மட்டுமின்றி, வேறு தயாரிப்புகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். இது சிறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்” என்றுக் கூறினார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எம்.பி திருநாவுக்கரசர், "எம்.பியாகி நான்கு ஆண்டுகளாக, மக்களிடம் சென்று குறைகள் கேட்டு வருகிறேன். வெளி நாட்டிலா இருந்தேன், இங்கு தான் இருந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதிமுக அரசு இருந்தது. மக்களிடம் மனுக்கள் வாங்கினாலும், மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமே..? அதிமுக அரசிடம் சொல்லி எப்படி செய்ய முடியும்.

தற்போது, எங்களுக்கு ஆதரவான கூட்டணி அரசு, மாநில ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால், மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்ற நம்பிக்கை உள்ளது. கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போது தான், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும். எங்களுக்கு ஆதரவான அரசும், அமைச்சர்களும் இருப்பதால், இப்போது வார்டு வார்டாக மக்களிடம் சென்று மனுக்கள் வாங்குகிறோம். அது தப்பா? மக்களுக்கு நல்லது தானே செய்கிறோம்.

கரோனா காலக்கட்டத்தில் இருந்தே, எம்பிக்களுக்கான 10 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு நிறுத்தி விட்டது. இரண்டு ஆண்டுகளாக நிதி வராததால், மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. இந்த ஆண்டு நிதி வந்தவுடன், மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவிடப்படும். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலம் உள்ளது. தேர்தலின் போது, சீட் ஒதுக்கீடு பற்றி நாங்கள் பேசி முடிவு செய்து கொள்கிறோம். நீங்கள் உங்க வேலையை பாருங்க. நாங்க எங்க வேலையை பார்க்கிறோம்" என ஆவேசமாக கூறினார்.

இதையும் படிங்க: 'பதவிப் பசி காரணமாகவே வழக்கு தொடுத்துள்ளார்' - ஓபிஎஸ் மீது அதிமுக தரப்பு குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.