ETV Bharat / state

"மதுவை ஒழிக்காமல் போதைப்பொருளை எப்படி ஒழிக்க முடியும்" ஏடிஜிபி சங்கர் முன்பு மாணவர் வேதனை பேச்சு!

author img

By

Published : Jun 9, 2023, 4:19 PM IST

Updated : Jun 9, 2023, 4:59 PM IST

திருச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் சங்கர் தலைமையில் நடைபெற்றது.

Anti drug awareness
போதைப் பொருள்

திருச்சி: திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள தனியார் (பிஷப்) கல்லூரியில் தமிழ்நாடு காவல்துறை மற்றும் திருச்சி மாநகர மற்றும் திருச்சி சரகம் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வுக் கூட்டம் தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் சங்கர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திருச்சி காவல்துறை துணை தலைவர் சரவண சுந்தர், திருச்சி மத்திய மாவட்ட காவல் துறை தலைவர் கார்த்திகேயன், திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்ய பிரியா, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், திருச்சி காவல்துறை ஆணையர் (தெற்கு) செல்வகுமார் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது.

மேலும் இந்த போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வு கூட்டத்தில் 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் கே.சங்கர் அவர்கள் பேசுகையில், "போதைப் பொருள் ஒழிப்பு என்பது புனிதமான விசயம். உங்களில் எத்தனை மாணவர்கள் போலீஸ் ஆக வேண்டும் என நினைக்கிறீர்கள். என்னைப் பொருத்தவரை நீங்கள் அனைவருமே போலீஸ் தான். போதைப் பொருளை ஒழிப்பதற்கான சிறப்பு போலீஸ். தமிழ்நாடு முதலமைச்சர் போதைப் பொருள் இல்லாத உலகத்தை உருவாக்குவோம் என்றார். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். போதைப் பொருளை ஒட்டு மொத்தமாக புரக்கணிக்க வேண்டும், உபயோகிக்கக் கூடாது.

முன்னர் பேசியவர்கள், போதைப் பொருளை பொருத்தவரை அதை சாப்பிட்டால் என்ன நிகழும், என்ன மாதிரியான பிரச்னைகள் எல்லாம் வரும். மனரீதியான, உடல் ரீதியாக என்ன பிரச்னை வரும் எனத் தெளிவாக கூறினார்கள். ஆனால் அதை சாப்பிடவே கூடாது. போதைப் பொருட்களை கட்டுப்படுத்தவும், விற்பனை செய்பவர்களை கைது செய்யும் அனைத்து முயற்சிகளையும் காவல்துறை எடுத்து வருகிறோம். ஆனால் அது மட்டும் போதாது. போதைப் பொருளை எடுத்துக் கொள்ளக் கூடிய மக்கள், மாணவர்கள் தான் எடுக்க மாட்டேன் என உறுதிமொழி எடுக்க வேண்டும்.

உங்களது நண்பர்கள் யாராவது எடுத்தால் கூட, நீங்கள் தான் அட்வைஸ் செய்ய வேண்டும். போதைப் பொருளை பொருத்தவரை ஒரு புறம் சப்ளை, ஒரு புறம் தேவை. போதைப் பொருள் வழங்கப்படுவதை காவல்துறை தடுக்கும். ஆனால், தேவையை தடுக்க நீங்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். டிமாண்டு இல்லை என்றால் சப்ளை இருக்காது அதற்கு நீங்கள் தான் ஒத்துழைக்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் கண்டிப்பாக போதை எதிர்ப்பு குழு இருக்கும், ஆகையால் நீங்கள் தான் போதைப் பொருளுக்கு எதிரான போராளிகள் என்றார். மேலும் போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் குறித்து‌ மாணவர்கள் காவல் துறைக்கு கட்டாயம் தகவல் கொடுக்க வேண்டும்" என்றார்.

அதன் பின்னர் போதைப்பொருள் ஒழிப்புக்கு எதிராக பள்ளி மாணவர்கள் உரையாற்றினார். அப்பொழுது ஒரு மாணவர் பேசுகையில், "போதைப் பொருளை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் மதுவை ஒழிக்க வேண்டும், தமிழ்நாடு அரசால் மதுவை ஒழிக்க முடியவில்லை. இதனால் தான் காவல்துறையினர் மாணவர்களாகிய நம்மிடம் வந்து இருக்கிறார்கள். நாம் நினைத்தால் முடியும் நாம் வீட்டில் இருக்கும் உறவினர்களிடம் இது குறித்து கூற வேண்டும் என அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பேசினார்.

இதையும் படிங்க: மதுபோதையில் வழக்கறிஞர் ஓட்டிய காரால் சிறுமி பலி.. நெல்லையில் நிகழ்ந்த சோக சம்பவம்!

Last Updated : Jun 9, 2023, 4:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.