ETV Bharat / state

தமிழ்நாட்டில் புதிதாக 1,903 பேருக்கு கரோனா உறுதி

author img

By

Published : Jul 25, 2022, 9:48 PM IST

தமிழ்நாட்டில் புதிதாக 1,903 பேருக்கு கரோனா பாதிப்புதமிழ்நாட்டில் புதிதாக 1,903 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் புதிதாக 1,903 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக ஆயிரத்து 903 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் அந்தமான் நிக்கோபார் தீவில் இருந்து வந்த ஒருவர் உள்பட ஆயிரத்து 903 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் ஜூலை 25ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளிவிபர் தகவலில் தமிழ்நாட்டின் மேலும் புதிதாக 27 ஆயிரத்து 235 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த ஆயிரத்து 902 நபர்களுக்கும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் இருந்து வந்த ஒருவர் உள்பட ஆயிரத்து 93 நபர்களுக்கு மேலும் புதிதாக கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி 67 லட்சத்து 56 ஆயிரத்து 182 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

அதன் மூலம் 35 லட்சத்து 34 ஆயிரத்து 246 நபர்கள் கரோனா தொற்று பாதிப்பிற்கு உட்பட்டிருந்தனர் என்பது தெரியவந்தது. அவர்களின் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 15 ஆயிரத்து 93 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 2ஆயிரத்து 219 நபர்கள் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 81ஆயிரத்து 121 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 415 பேர், செங்கல்பட்டில் 202 பேர், கோயம்புத்தூரில் 177 பேர், திருவள்ளூர் மாவட்டத்தில் 84 பேர், விருதுநகரில் 96 பேர் என அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாநிலத்தில் பரிசோதனை செய்பவர்களில் நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 5.6 விழுக்காடு குறைந்துள்ளது. அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 14.1 விழுக்காடு பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13.3 விழுக்காடு பேருக்கும் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:COVID 19: இந்தியாவில் புதிதாக 16, 866 பேருக்குத்தொற்று!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.