ETV Bharat / sports

டோக்கியோ ஒலிம்பிக்: குன்னூருக்கு வந்த அசோக் குமாருக்கு உற்சாக வரவேற்பு

author img

By

Published : Aug 11, 2021, 10:47 PM IST

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் காணொளி பகுத்தாய்வாளராக பங்கேற்ற அசோக் குமார்
டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் காணொளி பகுத்தாய்வாளராக பங்கேற்ற அசோக் குமார்

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய அணிக்கு காணொளி பகுத்தாய்வாளராக பங்கேற்ற அசோக் குமார் டோக்கியோவில் இருந்து குன்னூருக்கு திரும்பியதைத் தொடர்ந்து நீலகிரியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நீலகிரி: குன்னூரில் ஹாக்கி விளையாட்டில் இளைஞர்கள், மகளிர் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இங்குள்ள சிறுவர், சிறுமியர் முதல் இளைஞர்கள் வரை அனைவருக்கும் ஹாக்கி நீல்கிரிஸ் அமைப்பு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குன்னூர் காந்திபுரத்தைச் சேர்ந்த இளைஞர் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் காணொளி பகுப்பாய்வாளராக பணியாற்ற நீலகிரியிலிருந்து முதன்முறையாக சென்றார்.

ஹாக்கி நீல்கிரிஸ்

ஹாக்கி போட்டியில் இந்தியா வெண்கலம் வென்ற நிலையில், ஹாக்கி வீரர்கள் குழுவிற்கு பாராட்டுகள் குவிகிறது. இந்நிலையில் இந்தக் குழுவில் இடம்பெற்ற அசோக் குமார் நேற்று (ஆக. 10) குன்னூர் வந்தார்.

இவருக்கு ஹாக்கி நீல்கிரீஸ் அமைப்பு சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஹாக்கி பயிற்சி பெறும் சிறுவர், சிறுமியர், ஹாக்கி வீரர்கள், சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவ, மாணவிகள் உள்பட பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.

நீலகிரி அமைப்பின் தலைவர் அனந்த கிருஷ்ணன், துணைத் தலைவர் சுரேஷ்குமார், பொருளாளர் ராஜா, அப்பகுதியைச் சேர்ந்த இளம் ஹாக்கி வீரர்கள் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் காணொளி பகுத்தாய்வாளராக பங்கேற்ற அசோக் குமார்
டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் காணொளி பகுத்தாய்வாளராக பங்கேற்ற அசோக் குமார்

குன்னூர் காந்திபுரத்தைச் சேர்ந்த அசோக் குமார் ஹாக்கி நீல்கிரிஸ் அணியில் விளையாடி வந்தார். 2015ஆம் ஆண்டு சென்னையிலுள்ள ஸ்போர்ட்ஸ் மெக்கானிக் அமைப்பில், விளையாட்டு திறனை மேம்படுத்துவதற்காக சேர்ந்தார்.

தொடர்ந்து இந்திய ஹாக்கி அணிகள் பங்கேற்கும் சர்வதேசப் போட்டிகள் அனைத்திற்கும் தொழில்நுட்ப உதவியை இவர் வழங்கி வந்துள்ளார்.

இதையும் படிங்க: 'ENG vs IND LORDS TEST: அஸ்வினை சேர்க்கலாமா வேண்டாமா; கோலி திட்டம் என்ன?'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.