ETV Bharat / sports

டூ பிளஸ்ஸிஸ் நீக்கம்: புதிய கேப்டன் நியமனம்

author img

By

Published : Jan 22, 2020, 10:00 AM IST

quinton de kock
quinton de kock

தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக குவின்டன் டி காக் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் புதிய நிர்வாக இயக்குநர், புதிய பயிற்சியாளர் என கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக பல மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் தற்போது தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியின் கேப்டன் டூ பிளஸ்ஸிற்கு பதிலாகப் புதிய கேப்டனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.

தற்போது இங்கிலாந்து அணியுடனான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி ஒரு ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் தொடரில் 1-2 என பின்தங்கியுள்ளது. இதனிடையே இவ்விரு அணிகளும் அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கின்றன. அதற்கான 15 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

அதில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளஸ்ஸிற்கு பதிலாக குவின்டன் டி காக் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்தத் தொடரில் டூ பிளஸ்ஸிஸ் நீக்கப்பட்டுள்ளார். இது தவிர புதியதாக ஐந்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

quinton de kock
குவின்டன் டி காக்

இது குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் நிர்வாக இயக்குநர் கிரீம் ஸ்மித், ”குவின்டன் டி காக் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருவதோடு, தன்னம்பிக்கை மிக்க வீரராக வளர்ந்துள்ளார். அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் உள்ளார். அவருக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய பொறுப்பு, மேலும் அவரை சிறந்த வீரராக மாற்றும். அதன்மூலம் அவர் தென் ஆப்பிரிக்க அணிக்கு பல வெற்றிகளைப் பெற்றுத்தருவார்” என்றார்.

குவின்டன் டி காக் இதுவரை 115 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 சதங்கள் உட்பட 4 ஆயிரத்து 907 ரன்களை எடுத்துள்ளார். அவர் கடந்தாண்டு இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி கேப்டவுனில் பிப்ரவரி நான்காம் தேதி நடைபெறுகிறது.

தென் ஆப்பிரிக்க அணி விவர,: குவின்டன் டி காக் (கேப்டன்), டெம்பா பாவுமா, ஜோர்ன் ஃபார்டியுன், பியூரன் ஹென்ரிக்ஸ், ரீசா ஹென்ரிக்ஸ், சிசாண்டா மகாலா, ஜானேமேன் மாலன், டேவிட் மில்லர், ஆண்டில் பிலுக்குவாயோ, லுங்கி நிகிடி, டப்ராய்ஸ் ஷம்சி, லூத்தோ சிப்பாம்லா, ஜோன் ஜோன் ஸ்மட்ஸ், ரஸ்ஸி வேன் டெர் டஸ்ஸன், கைல் வெர்ரைன்.

Intro:Body:

quinton de kock appointed as SA captain


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.