ETV Bharat / science-and-technology

அழகு சாதனங்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு: அச்சுறுத்தும் ரிப்போர்ட்

author img

By

Published : Jun 18, 2019, 12:52 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

beauty

அழகு சாதனங்களால் 2 மணி நேரத்துக்கு ஒரு குழந்தை பாதிப்புக்குள்ளாவதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து 'கிளினிக்கல் பீடியாட்டிரிக்ஸ்' பத்திரிகையில் வெளியான ஆய்வில், வீடுகளில் பயன்படுத்தப்படும் அழகு சாதனப் பொருட்களால் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு குழந்தை பாதிப்புக்குள்ளாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும், குழந்தைகள் இந்த அழகு சாதனப் பொருட்களை விழுங்கும்போதோ, அவர்களின் தோல், கண் உள்ளிட்ட அதிக உணர்ச்சி மிகுந்த பகுதிகளில் இவை தொடர்பில் வரும்போதோ பாதிப்பு ஏற்படுவதாகவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்தவர்களில் ஒருவரான ரெபேகா மெக்ஆடம்ஸ் கூறுகையில், இம்மாதிரியான அழகு சாதனப் பொருட்களை இளம்வயது குழந்தைகள் பார்க்கும்போது அவர்கள் என்ன செய்வார்கள் என்று புரிந்துகொண்டால், அவர்களுக்கு எவ்வாறு பாதிப்புக்கள் ஏற்படுகிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.

இந்த வயதுக் குழந்தைகளுக்குப் படிக்கத் தெரியாது. அப்படியிருக்கையில் குழந்தைகள் தாங்கள் பார்க்கும் பொருட்களை உணவு என நினைத்து அதனை முகர்ந்தும், சுவைத்தும் பார்க்கின்றனர்.

இதில், நெயில் பாலிஷ்களால் ரிமூவர்களால் அதிகளவில் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். சிகை அலங்கார சாதனங்களால் குழந்தைகளுக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இம்மாதிரியான சாதங்களைக் குழந்தைகள் அண்டாத இடங்களில் பெற்றோர்கள் வைப்பது ஒன்றே இதற்கான தீர்வு என்றார்.

Intro:Body:

https://www.aninews.in/news/lifestyle/parenting/personal-care-products-injure-young-kids-every-two-hours-study20190617141331/


Conclusion:
Last Updated :Feb 16, 2021, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.