ETV Bharat / international

ப்ரீசர் அறைக்குள் சிக்கிக்கொண்ட நபர்: -18 டிகிரி செல்சியஸ் குளிரில் போராடிய நொடிகள்.!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 6:30 PM IST

Etv Bharat
Etv Bharat

'அன்பிற்கினியாள்' திரைப்படப்பாணியில் இங்கிலாந்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ப்ரீசர் அறைக்குள் (walk-in freezer) சிக்கிக்கொண்டு உயிருக்குப் போராடிய இளம்பெண் தப்பிப்பிழைத்த பதறவைக்கும் நொடிகள் குறித்த செய்தித் தொகுப்பு.

லண்டன்: இங்கிலாந்தின், லான்காஸ்டரில் இயங்கி வரும் பிரபல 'ப்ரீட் எ மேங்கர்' பீட்சா உணவகத்தில் ஊழியர் ஒருவரை ப்ரீசர் அறையில் தவறுதலாக வைத்துப் பூட்டியுள்ளனர். இரண்டரை மணி நேரம் மைனல் 18 டிகிரி செல்சியஸ் குளிரில் உயிருக்குப்போராடிய அந்த பெண் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அந்த பெண் ஊழியரிடம் உணவக நிர்வாகம் சார்பில் மன்னிப்புக் கோரப்பட்டுள்ள நிலையில் இந்திய மதிப்புப்படி சுமார் 7 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. லான்காஸ்டர் பகுதியில் மிகவும் பிரபலமான 'ப்ரீட் எ மேங்கர்' என்ற பீட்சா உணவகம் இயங்கி வருகிறது. இங்கு கடந்த 2018ஆம் ஆண்டு கணக்குப்படி 12 ஆயிரம் ஊழியர்களுக்கு மேல் பணியாற்றி வருகிறார்கள்.

சுமார் 450-க்கும் மேற்பட்டக் கிளைகளைக் கொண்ட இந்த 'ப்ரீட் எ மேங்கர்' பீட்சா உணவகத்தில், தமிழில் வெளியான அன்பிற்கினியாள் திரைப்படப்பாணியில் நெஞ்சைப் பதறவைக்கும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. உங்களை சுமார் ஒரு மணி நேரம் குளிர்சாதன பெட்டியின் ப்ரீசரில் இருக்க வைத்தால் என்ன ஆகும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

அப்படி ஒரு நிகழ்வுதான் அந்த உணவகத்தில் அரங்கேறி இருக்கிறது. அங்கு பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் தனது பணியின்போது பொருளை எடுப்பதற்காக ப்ரீசர் அறைக்குள் (walk-in freezer) சென்றிருக்கிறார். இது தெரியாமல் அந்த அறை தவறுதலாக பூட்டப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து, அந்த அறைக்குள் சிக்கிக்கொண்ட அந்த பெண் சுமார் இரண்டரை மணி நேரம் மைனஸ் 18 டிகிரி செல்சியஸ் குளிரில் உயிருக்குப் போராடித் தவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் அந்த ப்ரீசர் அறையில் சிக்கியது தெரியவந்துள்ளது. உடனடியாக அவரை மீட்ட உணவக நிர்வாகம், அவரை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றுள்ளது. இதனால் உடல் மற்றும் ரத்த நாளங்கள் பனிக்கட்டிபோல் உறைந்து hypothermia எனப்படும் தாழ்வெப்பநிலையை எட்டியுள்ளது. இதனை அடுத்து அவருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கிறார்.

இந்த சூழலில், இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியதற்கு 'ப்ரீட் எ மேங்கர்' உணவக நிர்வாகம் அந்த பெண் ஊழியரிடம் மன்னிப்பு கோரியுள்ளது. அது மட்டும் இன்றி அந்த நிர்வாகத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது இது முதல் முறை அல்ல, கடந்த 2022ஆம் ஆண்டு அமெரிக்காவில் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஊழியர் ஒருவர் ப்ரீசர் அறைக்குள் நுழைந்து சிக்கிக்கொண்டுள்ளார். பல மணி நேரம் அந்த அறையில் உயிருக்குப்போராடிய அவர், hypothermia ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். உலக அளவில் பேசு பொருளான இந்த நிகழ்வைத் தொடர்ந்து மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் இங்கிலாந்தில் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(Hypothermia) ஹைப்போதெர்மியா என்றால் என்ன? மனிதர்களின் சாதாரண உடல் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகும். அது குறையும் நிலையைத்தான் ஹைப்போதெர்மியா அதாவது தாழ்வெப்பநிலை என்று கூறுகிறோம். குளிர் காலம் மற்றும் குளிர் பிரதேசங்களில் மனிதர்கள் செல்லும்போது இதுபோன்ற தாழ்வெப்பநிலையை உடல் சந்திக்க நேரிடும். உடலுக்கு போதுமான வெப்பம் கிடைக்காதபோது உடலில் உள்ள ரத்த நாளங்கள் உறைய நேரிடும். அந்த நேரத்தில் இருதயம் செயலிழக்கும் அபாயம் கூட உள்ளது.

இதையும் படிங்க: Artificial Kidney: சிறுநீரகம் செயலிழந்தால் இனி கவலையில்லை.. செயற்கை சிறுநீரகத்தைக் கண்டுபிடித்துள்ள ஆய்வாளர்கள்.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.