ETV Bharat / international

'டொனால்ட் ட்ரம்ப் ஒரு கொலையாளி, பயங்கரவாதி' - ஈரான் அதிபர் ஹசான் ரவுஹானி சாடல்

author img

By

Published : Dec 16, 2020, 7:22 PM IST

Iranian President Hassan Rouhani
Iranian President Hassan Rouhani

அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு பயங்கரவாதி என்றும், அவர் பல குற்றங்களைச் செய்துள்ளார் என ஈரான் அதிபர் ஹசான் ரவுஹானி கடுமையாக சாடியுள்ளார்.

தெஹ்ரான் (ஈரான்): அமெரிக்க அதிபராக ஜோ பைடன் விரைவில் பதவியேற்கவுள்ளார் என்பதை காட்டிலும், டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி முடிவுக்கு வருகிறது என்பதுதான் தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என ஈரான் அதிபர் ஹசான் ரவுஹானி தெரிவித்துள்ளார்.

அந்நாட்டு அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், " டொனால்ட் ட்ரம்ப் பல குற்றங்களைச் செய்துள்ளார். அவர் ஒரு கொலையாளி, பயங்கரவாதி. ஈரான் அரசுக்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் அரசு பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2015ஆம் ஆண்டு போடப்பட்ட அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக ட்ரம்ப் அறிவித்தார்.

அந்க கணம் முதல் அமெரிக்கா ஈரான் மீது அதிக அழுத்தம் கொடுத்து வருகிறது. பொருளாதார தடை விதித்தல், இஸ்லாமிய மூத்த தலைவரை வான்வழி தாக்குதலில் கொலை செய்தல் போன்ற செயல்களை செய்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகளால், லெபனான், யேமனில் ஈரானின் சேவைகளுக்கு தடைகள் அதிகரித்தன. மேலும் இஸ்ரேல் நாட்டினால், ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி கொல்லப்பட்டார்.

இதனால் ஜோ பைடனின் பதவியேற்பைவிட டொனல்ட் ட்ரம்ப்பின் ஆட்சி முடிவுக்கு வருவதே மகிழ்ச்சி அளிக்கிறது. ஜோ பைடன், தான் அதிபராக பதவியேற்ற பின்னர் 2015ஆம் ஆண்டு அணு ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவோம் எனக் கூறியுள்ளார் " என்றார்.

இதையும் படிங்க: அணு விஞ்ஞானியைக் கொன்ற ஆயுதம் இஸ்ரேலைச் சேர்ந்தது: ஈரான் பகிரங்க குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.