ETV Bharat / international

'ஆறு வாரங்களில் தடுப்பூசிகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது' - ஆய்வில் தகவல்

author img

By

Published : Jul 27, 2021, 4:54 PM IST

vaccine
தடுப்பூசி

ஃபைசர், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக்கொண்டவர்களுக்கு ஆறு வாரங்களுக்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைய தொடங்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

லண்டன்: ஃபைசர், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் முழுமையாக செலுத்திய ஆறு வாரங்களுக்கு பிறகு அதன் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்குவதாகவும், 10 வாரங்களில் 50 விழுக்காட்டிற்கும் மேலாகக் குறைய வாய்ப்புள்ளது என்று தி லான்செட் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வை இங்கிலாந்தில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் லண்டனின் (UCL) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு வீழ்ச்சியடைந்தால், புதிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ்களுக்கு எதிரான பாதுகாப்பு கவலையளிப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

vaccine
ஃபைசர் தடுப்பூசி

ஆறு வாரங்களில் குறைகிறது

இதுகுறித்து யுசிஎல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் இன்ஃபர்மேட்டிக்ஸை சேர்ந்த மதுமிட்டா ஷ்ரோத்ரி கூறுகையில், "அஸ்ட்ராஜெனெகா, ஃபைசர் தடுப்பூசிகள் முழுமையாக செலுத்திய சமயத்தில், அதன் ஆன்டிபாடியின் அளவு மிக அதிகமாக இருந்தது.

vaccine
கரோனா தடுப்பூசி

அவை கரோனா வைரஸை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு வகித்தது. ஆனால், இரண்டு அல்லது மூன்று மாதங்களின் அதன் நோய் எதிர்ப்பு சக்தி அளவு கணிசமாக குறைந்துவிட்டன.

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியில் நோய் எதிர்ப்பு குறைவு

இந்த ஆய்வின் முடிவானது, 18 வயதுக்கு மேற்பட்ட 600 நபர்களின் தரவை அடிப்படையாகக் கொண்டு உறுதிசெய்யப்பட்டது. வயது,பாலினத்தின் அடிப்படையில் அந்த தரவுகள் பிரித்து கணக்கிடப்படவில்லை எனத் தெரிவித்தார்.

vaccine
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி

இரண்டு தடுப்பூசிகளின் தரவுகளை கணக்கிடுகையில், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை முதலில் முழுமையாக செலுத்திக்கொண்டவர்களுக்கு தற்போது குறைந்த அளவிலே நோய் எதிர்ப்பு திறன் இருந்திடும் என்பது தெளிவாக தெரிகிறது.

பூஸ்டர் தடுப்பூசி தேவை

மேலும், இந்த ஆய்வு முடிவு, 70 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களும், பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும் வயதானோர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை பரிந்துரைக்கிறது எனக் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு செப்டம்பர் மாதத்தில் தடுப்பூசி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.