ETV Bharat / entertainment

"வேட்டையன் ரோல் பண்ணும் போது பயந்து கொண்டே நடித்தேன்" - ராகவா லாரன்ஸ்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 1:15 PM IST

Chandramukhi 2
சந்திரமுகி 2

Chandramukhi 2: ராகவா லாரன்ஸ் நடிப்பில் செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நடைபெற்றது.

சென்னை: இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு சந்திரமுகி திரைப்படம் வெளியானது. இதில் நடிகர் பிரபு, வடிவேலு, நடிகை ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அப்போது இந்த திரைப்படம் வெளியாகி ஒரு ஆண்டு காலம் திரையரங்குகளில் ஓடி சாதனைப் படைத்தது.

சந்திரமுகி 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா
சந்திரமுகி 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

இதனைத் தொடர்ந்து இயக்குநர் பி.வாசு தனது 65 ஆவது படமாக 'சந்திரமுகி 2' (Chandramukhi 2) என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி.எம்.கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, சுபிக்ஷா கிருஷ்ணன் என ஒரு நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

சந்திரமுகி 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா
சந்திரமுகி 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

இந்நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள சந்திரமுகி 2 பட இசை வெளியீட்டு விழா சென்னை செம்மஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள்.

நடன இயக்குனர் கலா மாஸ்டர்: சந்திரமுகி 1 எல்லோரும் பார்த்து இருப்பீர்கள். சந்திரமுகி 2 படத்தில் கங்கனா ரொம்ப அழகா பண்ணி இருக்காங்க. சந்திரமுகி 2 படத்தில் நான், கங்கனா ரனாவத் கிளாசிக்கல் பாடல்களுக்கு நடன இயக்குனராக பண்ணி இருக்கேன். சந்திரமுகி 1 படத்தில் நான் 'ரா ரா' பாடலுக்கு நடன இயக்குனராக பண்ணி இருந்தேன். படத்தை பற்றி வெளியே சொல்லக் கூடாது. நீங்க பாருங்க அப்போது தெரியும் என்று கூறினார்.

இயக்குனர் பி.வாசு பேசும் போது: இந்த படத்தை பற்றி உங்களிடம் ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அடுத்து என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு இந்த படத்தில் இருக்கும். ராகவா லாரன்ஸ் இந்த கதாபாத்திரத்தில் வித்தியாசமாக பண்ணி இருக்கிறார். கங்கனாவும் மொழி தெரியாமல் இந்த படத்தில் நன்றாக பண்ணி இருக்கிறார். சந்திரமுகி 1 முழுவதுமாக முடிந்து விட்டதால், சந்திரமுகி 2க்கு புதுக்குழு போடப்பட்டது. படத்தில் வடிவேலு அவர்களிடம் தான் அந்த வீடு இருக்கிறது என தெரிவித்தார்.

நடிகை மகிமா நம்பியார்: இது ஒரு பெரிய படம், இந்த மாதிரியான ஒரு பெரிய படத்தில் ஒரு நிரந்தர கதாபாத்திரம் பண்ணுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி அன்று படம் வெளியாக உள்ளது. எல்லோரும் சப்போர்ட் பண்ணுங்க என்று தெரிவித்தார்.

இசை அமைப்பாளர் கீரவாணி பேசும் போது: சந்திரமுகி 1க்கு ஆதரவு கொடுத்த மாதிரி சந்திரமுகி 2க்கும் ஆதரவு கொடுப்பீர்கள் என்று ஆசைப்படுறேன். ரொம்ப நன்றி என தெரிவித்தார்.

சந்திரமுகி 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா
சந்திரமுகி 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியது: சந்திரமுகி படம் நான் பண்ண வாய்ப்பு கொடுத்த கடவுள், பி.வாசு மற்றும் சுபாஷ்கரன் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தை பற்றி கேட்ட உடன் சுபாஸ்கரன் பண்ணலாம் என்று கூறினார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர் ஆசிர்வாதம் எப்போவும் இருக்கிறது. இப்போது கூட அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிட்டு தான் வந்தேன். அவர் நடித்த அந்த வேட்டையன் கதாபாத்திரம் பண்ணும் போது கொஞ்சம் பயந்து தான் பண்ணேன். அவர் பெயரை கெடுக்கக் கூடாது என்று பயந்ததாக தெரிவித்தார்.

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே: இன்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். படத்தின் முதல் பாதியில் எனக்கு முக்கிய கதாபாத்திரம் உள்ளது. நான் வடிவேலுவின் தீவிர ரசிகை. அவர் கூட படத்தில் நடித்து இருப்பதை நினைக்கும் போது சந்தோசமாக உள்ளது என்று தெரிவித்தார்.

சந்திரமுகி 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா
சந்திரமுகி 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

நடிகை கங்கனா ரனாவத்: இது தான் என்னுடைய முதல் திகில் நகைச்சுவை திரைப்படம். ராகவா லாரன்ஸ் ஒரு நகைச்சுவையான ஒரு நபர் அது மட்டுமில்லை அவர் சிறந்த நடிகர். நான் சந்திரமுகி 1 பார்த்து இருக்கிறேன். அருமையாக இருக்கும். பி.வாசு ஒரு பிரம்மாண்டமான இயக்குனர். கலா மாஸ்டர் தான் நடனத்திற்கு பயிற்சி அளித்தார் என தெரிவித்தார்.

நடிகர் வடிவேலு: மாமன்னன் திரைப்படம் பெரிய வெற்றி அடைந்தது. அதேபோல இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும். ரஜினி எப்படி இருப்பாரோ அதே போல தான் ராகவா லாரன்ஸ் இருந்தார். கங்கனாவை நான் பார்க்கவே இல்லை. மேலும் இந்த படத்தில் சொர்ணா கதாபாத்திரமும் இல்லை என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சந்திரயான் 3 வெற்றி எதிரொலி... இஸ்ரோவுக்கு பறந்து சென்ற 6,500 வாழ்த்துக் கடிதங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.