ETV Bharat / city

பொன்னை ஆற்று தரைபால சீரமைப்புப் பணியை ஆய்வு செய்த ஆட்சியர்!

author img

By

Published : Dec 30, 2020, 10:43 PM IST

பொன்னை ஆற்று தரைபால சீரமைப்புப் பணியை ஆய்வு செய்த ஆட்சியர்!
பொன்னை ஆற்று தரைபால சீரமைப்புப் பணியை ஆய்வு செய்த ஆட்சியர்!

வேலூர் : நிவர் புயலால் சேதமடைந்த பொன்னை ஆற்று தரைபால சீரமைப்புப் பணியை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது பொன்னை ஆற்று தரைபாலம். வேலூர் - ராணிப்பேட்டை , வேலூர்- சித்தூர், திருப்பதி போன்றவற்றின் முக்கிய வழித்தடமாக உள்ளது.

இந்நிலையில் நிவர் புயலின் காரணமாக பெய்த தொடர் கன மழையாலும், ஆந்திரப்பிரதேசம் மாநிலம் சித்தூர் கவலகுண்டா அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரினாலும் பொன்னை ஆற்றில் சுமார் 30 ஆயிரம் கன அடி அளவுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதனால், பொன்னை தரை பாலத்தின் 3 கணவாய்கள் பாதிக்கப்பட்டன. கனரக வாகனங்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனிடையே, பொன்னை தரைபாலத்தை சீரமைத்து தர வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

பொன்னை ஆற்று தரைபால சீரமைப்புப் பணியை ஆய்வு செய்த ஆட்சியர்!

இதையடுத்து, பொன்னை தரைபாலத்தை உடனடியாக சீரமைக்க மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அண்மையில் உத்தரவிட்டார். இந்த உத்தரவின்பேரில், தற்போது சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெறுகின்றன.

இப்பணியை, ஆட்சியர் இன்று(டிச. 30) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகள் விரைவாகவும், தரமாகவும் நடைபெற வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க : பாஜக கூட்டணியை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள் - முத்தரசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.