ETV Bharat / city

குரூப் 4 தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

author img

By

Published : Jul 14, 2022, 3:25 PM IST

Updated : Jul 14, 2022, 3:39 PM IST

TNPSC
TNPSC

குரூப் 4 தேர்வு, வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட் வெளியிட்டுள்ளது.

சென்னை: கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிகளில், மொத்தம் 7 ஆயிரத்து 382 காலி இடங்கள் உள்ளன. இதில் 81 இடங்கள் - விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7 ஆயிரத்து 301 இடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படவுள்ளன.

அதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு, வரும் 24ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. குரூப் 4 தேர்வுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு 21 லட்சத்து 85 ஆயிரத்து 328 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் குருப் 4 தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் www.tnpscexams.in என்ற இணையதளத்திலிருந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:குரூப் 4 எழுத்து தேர்வு - பெண்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம்

Last Updated :Jul 14, 2022, 3:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.