ETV Bharat / city

கல்லூரிகள், பல்கலை. திறப்பதற்கான நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

author img

By

Published : Dec 6, 2020, 6:15 AM IST

tamilnadu Government order
தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: நாளை (டிச. 7) கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படவுள்ளன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைத் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி...

  • கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் விருப்பமுள்ள மாணவர்கள் கல்லூரிகளுக்கு வரலாம் மற்றவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைனில் கற்றல் பணிகளைத் தொடரலாம்.
  • ஆராய்ச்சி மாணவர்கள், முதுகலை இறுதியாண்டு மற்றும் இளங்கலை இறுதியாண்டு மாணவர்கள் கல்லூரிகளுக்கு வரலாம்.
  • மாணவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் ஒரு சமயத்தில் 50 விழுக்காடு மாணவர்களை மட்டுமே கல்லூரிகள் அனுமதிக்க வேண்டும். இதனைப் பின்பற்றும் வகையில் சுழற்சி முறை வகுப்புகளை நடத்தலாம்.
  • மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும்.
  • ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.
  • கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களின் உடல் வெப்பநிலையைக் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்.
  • விடுதியில் தங்கும் மாணவர்களது உடல் வெப்பநிலையைப் பரிசோதனை செய்ய வேண்டும்.
  • கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் மாணவர்கள் நேரடியாகத் தொடர்பு இருந்தால் அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை விடுதிகளில் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: உலகிலேயே அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகளை வாங்கும் இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.