ETV Bharat / city

தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் புதிய முயற்சி!

author img

By

Published : Feb 28, 2022, 7:10 AM IST

virtual museum
நிகர்மெய் அருங்காட்சியகம்

நிகர்மெய் அருங்காட்சியகம் (virtual museum) என்பது பார்வையாளர்கள் மின்னணு ஊடகம் வழியாக அணுகக்கூடிய டிஜிட்டல் படங்கள், ஒலி - பிற வரலாற்று, அறிவியல்பூர்வ, பண்பாட்டு ரீதியான விவரங்களின் தொகுப்பாகும்.

சென்னை: மெய்நிகர் (virtual world) மற்றும் மேம்பட்ட மெய் நுணுக்க முறையில் அருங்காட்சியகம் உருவாக்கம் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence - AI) மற்றும் இயந்திர நுண்திறனைச் செயல்படுத்தி போலி சிலைகளைக் கண்டறியும் அதிநவீன வழிமுறைகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

"கடந்த சில ஆண்டுகளில், தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு பல சிலைகளைப் பறிமுதல்செய்துள்ளது. அவை நீதிமன்ற சொத்துகளாகத் திருப்பியளிக்கப்பட்ட காவலில் வைக்கப்பட்டு பின்னர் மீண்டும் இந்தப் பிரிவிற்கே திரும்ப வந்துள்ளன.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவிடம் உள்ள 374 சிலைகளில் 36 உலோகச் சிலைகள், 265 கற்சிலைகள், 73 மரச்சிலைகள் உள்ளிட்டவை அடங்கும். இந்தச் சிலைகளைப் பாதுகாப்பாக தங்கள் வசம் எடுக்கும் நோக்கத்துடன் 36 உலோகச் சிலைகளை திருவொற்றியூரில் உள்ள ICON மையத்திற்கும், 265 சிலைகளை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்திற்கும் சிலை பிரிவு இடம் மாற்றியுள்ளது.

நிகர்மெய் அருங்காட்சியகம்

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவானது தற்போதுவரை ஐஐடி மெட்ராஸ் உதவியுடன் மேற்குறிப்பிட்டுள்ள அனைத்துச் சிலைகளின் முப்பரிமாண (3D) படங்களை எடுத்து அவற்றில் சிலவற்றை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. கலை மற்றும் கலாசார வல்லுநர்களுக்கு உதவுவது, பொதுமக்களின் பார்வை மற்றும் சிலை பிரிவிடம் உள்ள பழங்காலப் பண்பாட்டுப் பொக்கிஷங்களைப் போற்றுதல் நோக்கத்துடன் இத்தகைய கலை மற்றும் கலாசார நேசர்களுக்குப் பயன்படும் வகையில் ஒரு நிகர்மெய் (virtual museum) அருங்காட்சியகத்தை உருவாக்கியுள்ளோம்.

நிகர்மெய் அருங்காட்சியகம் என்பது பார்வையாளர்கள் மின்னணு ஊடகம் வழியாக அணுகக்கூடிய டிஜிட்டல் படங்கள், ஒலி - பிற வரலாற்று, அறிவியல்பூர்வ, பண்பாட்டு ரீதியான விவரங்களின் தொகுப்பாகும். தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, ஐஐடி மெட்ராசால் எடுக்கப்பட்ட முப்பரிமாண படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிகர்மெய் அருங்காட்சியத்திற்கான இணையதளத்தை உருவாக்க சிலை கடத்தல் தடுப்புப் பிரிவானது Invent Softlabs நிறுவனத்துடன் ஒன்றிணைந்துள்ளது.

அவர்கள் இதுவரை 108 முப்பரிமாண மாதிரிகளைப் பதிவேற்றியுள்ளனர். இவற்றை இணையதளத்தின் மூலம் காண முடியும். அதன் இணையதள முகவரி www.tnidols.com. கோயில்வாரியாக, உள்பிரிவுகள் வாரியாக, மாவட்ட வாரியாக தன்னார்வலர்களிடமிருந்து தமிழ்நாடு முழுவதும் கிடைக்கும் அனைத்துப் பழங்காலச் சிலைகளின் படங்களைப் பதிவேற்றுவதே சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் நீண்டகாலத் திட்டம்.

பல ஆண்டுகளாகச் சிலை கடத்துபவர்கள் பழங்காலச் சிலைகளைத் திருடிவிட்டு அந்த இடத்தில் போலியான சிலைகளை வைத்துச் சென்றுள்ளனர் எனப் பொதுமக்கள், கோயில் நிர்வாகங்களிடமிருந்து பொதுவான புகார் வந்துள்ளது. அதுபோக, திருடப்பட்ட சிலைகளை மீட்கும்போது, ஒரு சிலை பழங்காலத்தைச் சேர்ந்ததா இல்லையா என்று அடையாளம் காண வழியில்லை. அதனால், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவானது ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்து, இந்த நோக்கிலான பயிற்சி மேற்கொண்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'பூமி இழந்திடேல்' புத்தகம் வெளியீடு; வாசகர்கள் வரவேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.