ETV Bharat / business

ஏஐ டெக்னாலாஜியை கையிலெடுத்த பேடிஎம்..வேலையிழக்கும் அச்சத்தில் ஊழியர்கள்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 11:53 AM IST

Updated : Dec 26, 2023, 1:05 PM IST

PAYTM BETS BIG ON ARTIFICIAL INTELLIGENCE AND Paytm Layoffs EMPLOYEES
ஏஐ டெக்னாலாஜியை கையிலெடுத்த பேடிஎம்

Paytm: மொபைல் பேமெண்ட்டுகளுக்கான சேவையை இந்தியாவில் வழங்கி வரும் Paytm நிறுவனம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தனது வளர்ச்சிக்காக செயல்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது. இதனால், Paytm மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி: இந்தியாவின் முன்னோடியான மொபைல் பேமண்ட்ஸ் ஆப்-ஆகிய Paytm, தனது நிறுவனத்தில் உள்ள பணியாளர்களை ஒழுங்குப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதோடு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேகமாக செயல்படும் திட்டத்தையும் கையில் எடுத்துள்ளது.

மொபைல் பேமெண்ட்டுகளை இந்தியாவில் அறிமுகம் செய்த இந்நிறுவனம் தற்போது, இந்திய அளவிலான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பத்தை கொண்டு பயனர்களுக்கு விரைவாக பயனளிக்கவும், தனது பணியாளர்களை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து Paytm நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'AI உடன் ஆட்டோமெஷன் வசதி கொண்டு எங்களது செயல்பாடுகளை மேம்படுத்தவும், வளர்ச்சி, செலவுகள் உள்ளிட்ட பணிகளின் மந்த நிலையை நீக்கவும், சந்தைப்படுத்துதல் மற்றும் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றில் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட AI ஆனது, அதிக பலன்களை வழங்கியுள்ளதால், ஊழியர்களுக்கான செலவில் 10-15% வரை சேமிக்கவும் திட்டுமிட்டுள்ளோம். கூடுதலாக, ஆண்டு முழுவதும் செயல்படாத நிகழ்வுகளை கண்டறிந்து அவற்றை மதிப்பீடு செய்து வருகிறோம்' என்றார்.

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'பணம் செலுத்துதலில் முக்கிய அங்கமாக திகழும் எங்களில் வணிகம், வரும் ஆண்டுகளில் மனிதவளத்தை 15,000 ஆக அதிகரிக்கலாம். பணம் செலுத்துதலில் மேலதிகாரம் உள்ள நிரூபிக்கப்பட்ட லாபகரமான வணிக மாதிரிகளுடன் நாங்கள் இந்தியாவிற்கு புதுமையான சேவைகளை தருவோம்.

குறிப்பாக, கடன் வழங்குவது போன்றவைகளில் எங்கள் விநியோகத்திற்கான அடிப்படை அம்சங்களைக் கொண்டு வணிக ரீதியாக ஒரு வலிமையை வாடிக்கையாளர்களின் மத்தியில் பெறுவதற்காக புதிய வணிகங்களை விரிவுப்படுத்துவதோடு, அதனை ஊக்குவிப்போம்' என்று தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் லாபத்தை ஈட்டிவந்த Paytm, EBITDA (வட்டி, வரிகள், தேய்மானம், மற்றும் கடனடைப்புக்கு முந்தைய வருவாய்) மூலம் லாபம் ஈட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. இப்போது EBITDA-நிலை லாபத்தை ஈட்டுகிறது. Q2FY24 செயல்பாட்டை பின்பற்றி Paytm-ன் வருவாய் 32% என ஆண்டு வளர்ச்சி Rs.2,519 கோடியாக உள்ளது. ESOP (Employee Stock Ownership Plan) செலவுக்கு முன் அதன் EBITDA ஆனது Q1FY24 செயல்பாட்டில் UPI ஊக்கத்தொகைகளைத் தவிர்த்து Rs.84 கோடியாக ஒப்பிடும் போது, Rs.153 கோடியாக மேம்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு பேடிஎம் கொடுத்த அதிர்ச்சி: பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பல்வேறு அலுவலகங்களிலும் பணியாற்றும் சுமார் 1000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிதி சேவையை வழங்கும் நிறுவனமான Paytm, நிதி ஆதாரங்கள் பெருகாததால், கடந்த ஒரு சில மாதங்களாக செலவினக் குறைப்பு நடவடிக்கையை திட்டமிட்டு வந்துள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திடீரென மும்பையில் தரையிறங்கிய பிரான்ஸ் விமானம்.. மனிதக் கடத்தலா? - மத்திய அதிகாரிகள் விசாரணை!

Last Updated :Dec 26, 2023, 1:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.