ETV Bharat / bharat

திடீரென மும்பையில் தரையிறங்கிய பிரான்ஸ் விமானம்.. மனிதக் கடத்தலா? - மத்திய அதிகாரிகள் விசாரணை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 9:59 AM IST

Etv Bharat
Etv Bharat

France flight landed Mumbai: பிரான்சில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, மனிதக் கடத்தல் சந்தேகத்தின் பேரில் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை: உள்ளூர் நேரப்படி, பிற்பகல் 2.30 மணிக்கு பாரீஸ்-க்கு அருகில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் இருந்து ரோமானியன் சார்ட்டர் கம்பெனி லெஜண்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர்பஸ் ஏ340 என்ற விமானம், 276 பயணிகள் உடன் நிகாரகுவா நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது, இந்த விமானத்தில் மனிதக் கடத்தல் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, இந்த விமானம் அவசரமாக மும்பையில் இன்று அதிகாலை 4 மணியளவில் தரையிறக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர்களுக்குத் தேவையான கழிப்பறை, குளியலறை, உணவு மற்றும் நீர் ஆகாரங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. இதனிடையே, இந்த விமானத்தில் வந்த இரண்டு சிறுவர்கள் உள்பட 25 பேர் புகலிடம் கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும், ஆனால் அவர்கள் இதுவரை பிரெஞ்சு நாட்டின் குடிமகன்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

  • Maharashtra | Visuals of the passengers who arrived in Mumbai today, after the plane they were travelling in was grounded in France for four days over suspected human trafficking pic.twitter.com/IKOKiJUeYN

    — ANI (@ANI) December 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் இருவர் பிரெஞ்சு நாட்டின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்கள் என பிரெஞ்சு செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதேநேரம், இந்த விமானத்தில் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் 11 பேர் சேர்ந்து 303 பேர் பயணம் மேற்கொண்டதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இந்த பயணத்தின் நோக்கம் என்ன என்பது குறித்து பிரெஞ்சு அதிகாரிகள் புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம், தற்போது மும்பையில் உள்ள அப்பயணிகளிடம், நாட்டின் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (CISF) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஒருங்கிணைந்த நாடுகளின் குடியுரிமை மற்றும் எல்லை ரோந்து (CBP) அமைப்பில் உள்ள தரவுகளின்படி, நிகாரகுவா என்பது புகலிடம் தேடி வருவோருக்கான ஒரு மையப் பகுதியாகத் திகழ்கிறது.

அதேநேரம், 2023 நிதியாண்டில் மட்டும் 96 ஆயிரத்து 917 இந்தியர்கள் அமெரிக்காவினுள் சட்டவிரோதமாக நுழைய முயற்சி செய்துள்ளதாக அத்தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், சிபிபி தரவுகளின்படி, மெக்ஸிகோ நில எல்லை வழியாக குறைந்தபட்சம் 41 ஆயிரத்து 770 பேர் அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர்.

அதேபோல், உலகில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு விமானம் மூலம் இடம் பெயர்வதற்கும், அதேநேரம் மிக எளிதான முறையில் செல்வதற்கான இடங்களின் பட்டியலில் நிகாரகுவா 3வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பராக் பல்கலைக்கழக துப்பாக்கிச் சூடு - 14 பேர் பலி! வெளியான துப்பாக்கிச் சூட்டின் காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.