ETV Bharat / bharat

அதானி குழும விவகாரம் - எதிர்க்கட்சிகள் ஆலோசனை, போராட்டம்!

author img

By

Published : Feb 5, 2023, 4:54 PM IST

Opposition
Opposition

நாடாளுமன்றத்தில் அதானி குழும விவகாரத்தை விவாதிப்பது தொடர்பான எதிர்க்கட்சிகளின் வியூகக் கூட்டம் நாளை(பிப்.6) காலை நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

டெல்லி: அதானி குழுமம் குறித்து, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், அதானி குழுமம் முறைகேடு செய்து பங்குச்சந்தையில் தனது நிறுவனத்தின் பங்குகளை உயர்த்தியதாகவும், பல மொரீசியஸ், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற வரி விலக்கு நாடுகளில் உள்ள ஷெல் கம்பெனிகளின் மூலம் தன் பங்குகளில் முதலீடு செய்து செயற்கையாக சந்தை மதிப்பை பெருக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

போலியான நிறுவனங்களை உருவாக்கி வரி ஏய்ப்பு செய்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆய்வறிக்கையின் எதிரொலியாக அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. எல்ஐசி, எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் இதில் பாதிக்கப்படக்கூடும் என்பதால், அதானி குழும விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.

அதானி குழுமம் பற்றிய ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. கடந்த இரண்டு நாட்களாக அதானி குழுமம் விவகாரத்தை எதிக்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்பி வருகின்றன. ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த இரு நாட்களாக ஒத்திவைக்கப்பட்டன.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அதானி குழும விவகாரத்தை விவாதிப்பது தொடர்பான எதிர்க்கட்சிகளின் வியூகக் கூட்டம் நாளை(பிப்.5) காலை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, தங்களது வியூகம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், அதைத்தொடர்ந்து அங்குள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரம் ஹிண்டன்பர்க் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை தேவையில்லாமல் சம்மந்தப்படுத்துவதாக பாஜக எம்பிக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: பிரதமரின் 8½ ஆண்டு ஆட்சியில் விமான போக்குவரத்து துறை முன்னேற்றம் - அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.