ETV Bharat / bharat

ஜியோ நிறுவனம் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு - மன்னிப்பு கேட்ட முகேஷ் அம்பானி!

author img

By ANI

Published : Jan 7, 2024, 4:10 PM IST

mukesh-ambani-said-reliance-committed-to-making-new-investments-in-renewable-energy-and-green-hydrogen-in-tn
தமிழகத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ நிறுவனம் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு - முகேஷ் அம்பானி

Mukesh Ambani Announcement: ரிலையன்ஸ் குழுமம் - ஜியோ நிறுவனம் மூலம் தமிழ்நாட்டில் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. தமிழ்நாடு கலாச்சாரத்திற்கு சிறந்த மாநிலம்எனவும், தொடர்ந்து தமிழகத்தில் முதலீடு செய்வோம் எனவும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று (ஜனவரி 07) மற்றும் நாளை ஆகிய இரு நாட்கள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

  • #WATCH | On the Tamil Nadu Global Investors Meet – 2024 in Chennai, Reliance Industries Chairman and MD Mukesh Ambani says, "...Under the leadership of Thiru Stalin, Tamil Nadu has become one of the most business-friendly states in the country. Therefore, I have every reason to… pic.twitter.com/Pg5PUuiIxQ

    — ANI (@ANI) January 7, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.5.50 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் 45 நாடுகளுக்கும் மேற்பட்ட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இதில் குவால்காம் நிறுவனத்தின் ரூ.177.27 கோடி மதிப்பிலான சிப் வடிவமைப்பு மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பர்ஸ்ட் சோலார், எல்ஜிபிடிக்யூ மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் வேலைவாய்ப்பு உறுதி அளித்துள்ள கோத்ரேஜ் நிறுவனத்தின் ரூ.515 கோடி முதலீட்டிலான கன்ஸ்யூமர் புராடக்ட் ஆகியவற்றிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், டாடா எலக்ட்ரானிக்ஸ் ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு, பெஹட்ரான் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ரூ.1,000 கோடி முதலீடு, ஜேஎஸ்டபிள்யூ எனர்ஜி நிறுவனம் ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு, டிவிஎஸ் குரூப் கூடுதலாக ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு, மிட்சுபிசி எலக்ட்ரிக்ஸ் ரூ.500 கோடி முதலீடு, மர்ஸ்க், ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் ரூ.6 ஆயிரம் கோடி முதலீடு என பல்வேறு நிறுவனங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த வகையில், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி காணொளி மூலம் தெரிவிக்கும்போது, "தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாட்டில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் கலந்து கொள்ள முடியவில்லை. அதற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, இந்தியாவில் தொழில் நிறுவனங்களுக்கு மிக நெருக்கமான மாநிலமாக முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு தொழில் மற்றும் கலாச்சாரத்தில் சிறந்த மாநிலமாக உள்ளது.

தமிழ்நாட்டில் ரிலையன்ஸ் சார்பில் ரூ.25,000 கோடியில் சில்லறை விற்பனை நிலையங்கள் மட்டும் 1,300 திறக்கப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனம் ரூ.35,000 கோடி முதலீடு செய்துள்ளது. ஜியோ முதலீடு மூலம் நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருக்கும் 35 மில்லியன் வாடிக்கையாளர்கள் பலன் அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (AI) ஆற்றல் துறை முன்னிலையில் உள்ளது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஜியோ நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்தை மக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளது. மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் கனடாவின் ப்ரூக்பிஎல்ட் அஸட் மேனேஜ்மென்ட் (Brookfield Asset Management) மற்றும் அமெரிக்காவின் டிஜிட்டல் ரியாலிட்டி (Digital Reality) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து உலகத் தரத்தில் டேட்டா சென்டரை தமிழ்நாட்டில் திறக்க உள்ளது.

தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு மற்றும் பசுமை ஹைட்ரஜன் ஆகிய துறைகளில் முதலீடு செய்யப்படவுள்ளது. தமிழகத்தின் நிலையான வளர்ச்சியை ஊக்குவித்து, உலகில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்திலிருந்து பூமியைக் காக்க தமிழக அரசுடன் இணைந்து பணியாற்ற உள்ளோம். எங்களின் முன்னெடுப்பிற்கு தமிழ்நாடு அரசின் ஆதரவு இருக்கும் என நம்புகிறேன். தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.