ETV Bharat / bharat

சுதந்திர தினம் 2023: ரூ.528 கோடியில் சட்டசபை- புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

author img

By

Published : Aug 15, 2023, 2:26 PM IST

சுதந்திர தினம் 2023: ரூ.528 கோடியில் சட்டசபை- முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
சுதந்திர தினம் 2023: ரூ.528 கோடியில் சட்டசபை- முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

independence day2023: 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கடற்கரை சாலையில் தேசியக் கொடியை ஏற்றி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை பெற்றுக்கொண்டார்.

சுதந்திர தினம் 2023: ரூ.528 கோடியில் சட்டசபை- முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: இந்தியாவின் 77 வது சுதந்திர தினத்தையொட்டி இன்று (ஆகஸ்ட்15) புதுச்சேரி கடற்கரை சாலையில் முதல் அமைச்சர் ரங்கசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

நாட்டின் 77வது சுதந்திர தினவிழா புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடியேற்றி வைத்து காவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

அதைத் தொடர்ந்து சுதந்திர தின விழாவில் பேசிய அவர், பெரியகாலாப்பட்டில் ரூ.20 கோடியிலும், நல்லவாடுவில் ரூ.19 கோடியிலும் மீன் இறங்கு தளம் அமைக்கவும், தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தை ரூ.54 கோடியில் விரிவாக்கம் செய்யவும் மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதால் விரைவில் அதன் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

மேலும், தட்டாஞ்சாவடியில் ரூ.528 கோடியில் சட்டசபை வளாகம், காலாப்பட்டில் ரூ.483 கோடியில் தேசிய சட்ட பல்கலைக்கழகம் கட்டப்பட உள்ளது. பாண்டி மெரினா கடற்கரையில் ரூ.14½ கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நீரை குழாய்கள் மூலம் கொண்டுசெல்ல ரூ.12½ கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், பிள்ளையார்குப்பம் படுகை அணை ரூ.20 கோடியிலும், பாகூர் ஏரிக்கரையில் ரூ.8 கோடியில் ஒருவழிப் பாலம், கொம்பந்தான்மேடு அணைக்கட்டு ரூ.13 கோடியில் கரைகளை செம்மைப்படுத்துதல், குடுவையாற்றில் ரூ.2 கோடியில் படுகை அணை கட்டுவது உள்ளிட்ட நீர் நிலை மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும் என்றார்.

மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அண்ணா திடல் கட்டுமான பணி முடிவடைந்து இந்த ஆண்டே திறக்கப்படும். சின்னையாபுரத்தில் ரூ.23 கோடியில் 220 அடுக்குமாடி குடியிருப்புகள் இந்த நிதியாண்டில் முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும். ரூ.23 கோடியில் மின்சார பஸ்கள் வாங்கப்பட்டு இந்த நிதியாண்டிற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

அதனைத்தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடிக்கு அருகில் ரூ.15 கோடியில் மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் பஸ்களுக்கு தனி பஸ் ஸ்டாண்டு கட்டப்படும். தாவரவியல் பூங்கா ரூ.15 கோடியில் மேம்படுத்தப்படும். சுதேசி பஞ்சாலை வளாகத்தில் ரூ.5½ கோடியில் நகர காட்டுப் பகுதி பசுமை பூங்காவாக மேம்படுத்தப்படும். வ.உ.சி., கலவை கல்லூரி, பான்சியானா பள்ளிகள் பழமை மாறாமல் மீண்டும் கட்டப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படுவதாகவும் கூறினார்.

புதுவையை முன்னேறிய மாநிலமாக மாற்ற எங்கள் அரசின் செயல்பாட்டிற்கு நீங்கள் அளிக்கும் ஆதரவுக்கும், ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிக்கிறோம். இந்த ஆதரவை தொடர்ந்து வழங்க வேண்டும் எனக்கேட்டு அனைவருக்கும் உளம் நிறைந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்த காவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதையும் படிங்க: "மாநிலப் பட்டியலில் கல்வி” - சுதந்திர தின விழாவில் நீட் தேர்வுக்காக முழங்கிய ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.