முழுக்க முழுக்க மனிதர்களால் மட்டுமே இழுக்கப்பட்ட கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயில் தேரோட்டம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 2:13 PM IST

thumbnail

தஞ்சாவூர்: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் நடைபெறும் மாசிமகம் உலக பிரசித்திப் பெற்றது. இந்த மாசிமகப் பெருவிழா, 12 சைவ கோயில்கள் மற்றும் 5 வைணவ கோயில்கள் இணைந்து 10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். அது போல இந்த ஆண்டு, இவ்விழா அபிமுகேஸ்வரர், காசி விஸ்வநாதர், வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் மற்றும் கௌதமேஸ்வரர் என ஐந்து சைவக் கோயில்களிலும் கடந்த மாதம் 15ஆம் தேதியும், சக்கரபாணி, ராஜ கோபால சுவாமி மற்றும் ஆதிவராகப்பெருமாள் ஆகிய மூன்று வைணவக் கோயில்களில் கடந்த 16ஆம் தேதியும் இந்த உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் திருவீதியுலாவும் நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வைணவத் தலங்களில் 9ஆம் நாளான இன்று (பிப்.24) மாசி மகத்தினை முன்னிட்டு, கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயிலில் உற்சவர் சுதர்சனவள்ளி மற்றும் விஜயவள்ளி தாயார் சமேத சக்கரபாணி சுவாமிக்கு புதிய பட்டு வஸ்திரங்கள், பல வண்ண நறுமண மலர் மாலைகள் சூட்டி, நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட அலங்கரிக்கப்பட்ட தேரில் உலா வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்து, உலா வந்த சுவாமிகளை தரிசனம் செய்தனர். 76 அடி உயரமும், 26 அடி அகலமும், 50 டன் எடையும் கொண்ட இத்தேரை, எந்த விதமான இயந்திர உதவியும் இன்றி இழுக்கவும், திருப்பவும் என முற்றிலுமாக மனித சக்திகளே பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.