ETV Bharat / state

"கலாச்சாரங்களை ஆவணப்படுத்த 2 கோடி ரூபாய் நிதி"- மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ராமச்சந்திரன் புகழாரம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 10:22 PM IST

அமைச்சர் கா. ராமச்சந்திரன்
அமைச்சர் கா. ராமச்சந்திரன்

Minister K Ramachandran: பழங்குடியினர் மொழி, கலாச்சாரங்களை ஆவணப்படுத்தத் தனித் துறை அமைக்கப்பட்டு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய ஒரே அரசு திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் எனச் சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கா. ராமச்சந்திரன்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கலைச் சங்கமம் கலை நிகழ்ச்சிகளைச் சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் கா. ராமச்சந்திரன் பேசுகையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் பழங்குடியினர் மக்களின் மொழிகளை மற்றும் அவர்களின் கலாச்சாரங்களை ஆவணப்படுத்தும் வகையில் தனித்துறை அமைக்கப்பட்டு இதற்காக 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் மலைக் கிராமங்களில் வசிக்கக்கூடிய தோடர் ,கோத்தர், குறும்பர் போன்ற பழங்குடியினர் மக்கள் மற்றும் பூர்வ குடிகளான படுகர் சமுதாயம் மக்களின் மொழிகளை ஆவணப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது கூறினார்.

இதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடத்திய குழுக்களுக்குக் காசோலை வழங்கி கௌரவித்தார். இதனைத் தொடர்ந்து இயல் இசை நாடகம், தோடர் பழங்குடியினர்களின் நடனம் உட்படக் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்தோஸ், உதகை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் மாயன், உதகை நகர மன்றத் தலைவி வாணி ஸ்ரீ, உதகை நகர மன்ற துணைத் தலைவர் ரவிக்குமார் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கிய 'AI' - ஜெயலலிதாவின் குரலில் ஈபிஎஸ் வெளியிட்ட ஆடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.