ETV Bharat / entertainment

ஆசை கணவர் அஜித்குமாருக்கு ஷாலினி அளித்த சர்ப்ரைஸ் கிப்ட்! - Shalini gifted Bike to Ajithkumar

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 1, 2024, 5:10 PM IST

Etv Bharat
Etv Bharat

Shalini gifted to Ajith on his birthday: நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை ஒட்டி, அவரது மனைவி ஷாலினி பல லட்சம் மதிப்புள்ள டுகாட்டி (Ducati) பைக் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார்.

சென்னை: நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவரது நடிப்பில் கடைசியாக துணிவு படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி (Good Bad Ugly) என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்து, இந்தாண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குட் பேட் அக்லி படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று அஜித்குமார் தனது 53வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதைத் தொடர்ந்து, அவரது ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அஜித் பிறந்தநாளை ஒட்டி, அவரது பில்லா மற்றும் தீனா ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, நடிகர் அஜித்தின் காதல் மனைவி ஷாலினி, பிறந்தநாளுக்கு விலை உயர்ந்த டுகாட்டி (Ducati) பைக் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அஜித் பைக் பிரியர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவர் பைக்கில் உலகம் முழுவதும் சுற்றி வருகிறார். இந்த நிலையில், அவரது மனைவி பைக் பரிசளித்த சம்பவம் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரஜினியின் 'கூலி' பட டீசருக்கு செக் வைத்த இளையராஜா.. நோட்டீஸ் அனுப்ப காரணம் என்ன? - RAJINIKANTH COOLIE TEASER ISSUE

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.