தமிழ்நாடு

tamil nadu

The Kerala Story: “படத்தை படமாக பார்க்க செல்லிவிட்டு, தற்போது ஏன் தடை”: தமிழிசை செளந்தரராஜன் கேள்வி

By

Published : May 6, 2023, 4:51 PM IST

திரைப்படத்தை படமாக பார்க்க வேண்டும் எனக் கூறுகிறார்கள் பின்னர் எதற்கு ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு மட்டும் தடை கேட்கிறார்கள் என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.

tamilisai soundararajan
தமிழிசை செளந்தரராஜன்

“படத்தை படமாக பார்க்க செல்லிவிட்டு, தற்போது ஏன் தி கேரளா ஸ்டோரிக்கு தடை”

திருச்சி:தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்க தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விமானம் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையம் சென்றார். அப்போது திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதுச்சேரியில் உள்ள ஜிம்பர் மருத்துவமனை முற்றிலும் ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்டது. அங்கு முறையாக மருத்துவம் இல்லை எனக்கோரி தமிழ்நாட்டிலிருந்து ஒரு சிலர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இது கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள கூடிய விஷயம் அல்ல. ஆளுநர் பதவியே தேவை இல்லை என்று சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பின்னர் நீங்கள் இப்போது கூறக்கூடாது. எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது ராஜ்பவன் வாசலை திமுக மிதிக்காமல் இருந்திருக்கலாமே, அப்போது எதற்கெடுத்தாலும் நீங்கள் ராஜ்பவன் வாசலை மிதித்தீர்கள்.

எதிர்க்கட்சியாக இருந்தபோது உங்களுக்கு ஆளுநர் தேவைப்பட்டார். ஆனால், இன்று ஆளும் கட்சியாக இருக்கும்போது ஆளுநர் தேவைப்படவில்லையா?” என கேள்வி எழுப்பினார். இதனால், உங்கள் எண்ணத்தை நிலையற்ற தன்மை இருக்கிறது என்றும் நீங்கள் நேரத்திற்கு ஏற்றவாறு பேசுகிறீர்கள் என்பதும் தெரியவருகிறது என்றார்.

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் மிகுந்த கால அவகாசம் எடுத்துக் கொண்டது ஏன் என்கிற கேள்விக்கு? கால அவகாசம் ஆன்லைன் தடை சட்டத்திற்கு மட்டுமல்ல, மற்ற சில சட்ட மசோதாக்களுக்கும் கூட அவர் எடுத்துக் கொண்டு இருக்கலாம். ஒவ்வொன்றையும் பரிசீலனை செய்வதற்கு கால அவகாசம் தேவைப்பட்டு இருக்கலாம்.

மேலும் ஆளுநர்களை முதலில் ஆளுநராக நடத்துங்கள். எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு, ஆளுநருக்கும் அவர் கருத்துகளை கூற கண்டிப்பாக முழு உரிமை உண்டு. ஆளுநரின் கருத்துகளுக்கு நீங்கள் எதிர் கருத்து கூறலாம். ஆனால் ஆளுநர் கருத்தே கூறக்கூடாது என நீங்கள் எப்படி சொல்ல முடியும்.

அதைத் தொடர்ந்து, திமுக அரசு இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்து பேசி வரும் நிலையில், இது குறித்த கருத்து என்னவென்று கேட்டதற்கு, அறிவிப்பு கொடுத்து செயல்படுத்தக் கூடிய அரசை பார்த்திருக்கிறோம். ஆனால் அறிவிப்பு கொடுத்து அதனை திரும்ப பெரும் அரசாக தான் திமுக அரசு உள்ளது என்பது எனது கருத்த என்றார்.

தீவிரவாதத்தை எந்த வகையிலும் அனுமதிக்க கூடாது என்பதே இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கருத்து, ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை நானும் பார்க்க என்று உள்ளேன். திரைப்படத்தை திரைப்படமாக பார்க்க வேண்டும் எனக் கூறுகிறார்கள். ஆனால் இப்போது எதற்கு இந்த படத்திற்கு மட்டும் தடை கேட்கிறார்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். என்னைப் பொருத்தவரை எந்த வகையிலும் தீவிரவாதம் சார்ந்த கருத்துகளை அனுமதிக்க கூடாது. அதிலும் குறிப்பாக இளைஞர்களை பாதிக்கக் கூடாது” என ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Ooty Summer Festival: கோத்தகிரியில் தொடங்கியது 12வது காய்கறி கண்காட்சி.. சிறப்பம்சங்கள் என்ன?

ABOUT THE AUTHOR

...view details