ETV Bharat / state

Ooty Summer Festival: கோத்தகிரியில் தொடங்கியது 12வது காய்கறி கண்காட்சி.. சிறப்பம்சங்கள் என்ன?

author img

By

Published : May 6, 2023, 2:10 PM IST

கோடை விழா துவக்கத்தின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரியில் 12-வது காய்கறி கண்காட்சி கோலாகலமாக துவங்கியது.

Kotagiri vegetable exhibition
காய்கறி கண்காட்சி

கோத்தகிரியில் துவங்கியது 12-வது காய்கறி கண்காட்சி!

நீலகிரி: சுற்றுலாத் தலமான கோத்தகிரி நேரு பூங்காவில் 12 ஆவது காய்கறி கண்காட்சி துவங்கியது. இந்நிகழ்ச்சியில் பூங்காவின் நுழைவு வாயில் முதல் பூங்கா முழுவதும் டன் கணக்கான காய்கறிகளால் சிற்பங்கள் மற்றும் வடிவமைப்புகள் அமைக்கப்பட்டிருந்து. இதில் ஊட்டி மற்றும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களின் தோட்டக்கலைத் துறை சார்பாக வைக்கப்பட்டுள்ள காய்கறி சிற்பங்கள் சுற்றுலாப் பயணிகளின் கண் கவரும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் ஐநா சபை தற்போது சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ள நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 1 டன் காய்கறிகளால் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட மக்காச்சோளம், கம்பு ஆகியன பூங்கா மையப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.இது அங்கு வந்த சுற்றுலா பயணிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

மேலும் இந்த கண்காட்சியில் மொத்தம் 5 டன் காய்கறிகளை பயன்படுத்தி சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மிகப் பிரமாண்டமாக துவங்கிய கோடை விழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா மற்றும் மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.

சுற்றுலாப் பயணி மஞ்சுளா கார்த்திக் கூறியது, “கோத்தகிரி காய்கறி கண்காட்சி மிகவும் அழகாக உள்ளது. பார்க்கும் போதே கண்களுக்கு மிகவும் குளிச்சியாக உள்ளது. நமக்கு சமைக்கும் காய்கறியில் சில தான் தெரிகிறது. ஆனால் இங்கு நாட்டு காய்கறிகள் உட்படப் பல காய்கறிகளை வைத்து கண்காட்சி தயாரித்துள்ளனர். மேலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் இதை செய்துள்ளனர். இவர்களின் கை வண்ணம் மிகவும் அருமையாக உள்ளது. அனைவரும் சிரமம் பார்க்காமல் இந்த கண்காட்சிக்கு வந்து பார்க்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சமையல் மாஸ்டர் கொலை வழக்கில் சிஐஎஸ்எப் வீரர் கைது; சீர்காழியில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.