தமிழ்நாடு

tamil nadu

ஜல்லிக்கட்டு - மருத்துவமனையில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு

By

Published : Jan 24, 2022, 6:45 AM IST

ஜல்லிக்கட்டு காளை நெஞ்சில் உதைத்ததில் மாடுபிடி வீரர் உயிரிழந்தார்
ஜல்லிக்கட்டு காளை நெஞ்சில் உதைத்ததில் மாடுபிடி வீரர் உயிரிழந்தார் ()

திருச்சி மாவட்டம் பள்ளப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருச்சி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதனை ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் மகேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 750 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்க முற்பட்டனர். இப்போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

காளை நெஞ்சில் உதைத்ததில் மாடுபிடி வீரர் உயிரிழந்தார்

போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், கட்டில்,அண்டா, குடம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர் சசி கில்பட் காளை நெஞ்சில் உதைத்ததில், மயக்கம் அடைந்தார்.

மாடுபிடி வீரர் உயிரிழந்தார்

இதனையடுத்து, அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று (ஜனவரி 23 ) உயிரிழந்தார்.

இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - திருச்சியில் சூடுபிடிக்கும் தேர்தல்களம்

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details