தமிழ்நாடு

tamil nadu

மருத்துவ குணமிக்க தவுன் விற்பனை!

By

Published : Jan 24, 2022, 8:59 PM IST

மருத்துவ குணமிக்க தவுன் விற்பனை தென் மாவட்டங்களில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதை பற்றிய சிறப்புத் தொகுப்பை காணலாம்.

மருத்துவ குணமிக்க தவுன் விற்பனை
மருத்துவ குணமிக்க தவுன் விற்பனை

பனம் பழத்தின் கொட்டையிலிருந்து கிடைக்கக்கூடிய மருத்துவ குணமிக்க தவுன் விற்பனை தென் மாவட்டங்களில் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. தமிழர்களின் வாழ்வியல் முக்கிய அங்கமாக பனை மரம் விளங்குகிறது.

பனை மரத்தின் வேர் முதல், உச்சி வரை மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது. அந்த வகையில் பனை மரத்திலிருந்து பனைஓலை விசிறிகள் செய்வதற்கும், கூரைகள் கட்டுவதற்கும், பதநீர், இயற்கை பானமான கள், பனங்கிழங்கு, போன்றவை கிடைத்து வருகிறது.

மருத்துவ குணமிக்க தவுன் விற்பனை

அந்த வகையில் பனம்பழத்தின் கொட்டையிலிருந்து உண்பதற்கு ஏற்ற வகையில் தவுண் கிடைக்கிறது. ஒரு சில மாதங்களில் கிடைக்கப்பெறும் இந்த தவுண் மருத்துவ குணமிக்கதாக கருதப்படுகிறது. தவுன் பருவம் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நீடிக்கும், நுங்கு பனம்பழமாக மாற 40 நாள்கள் பிடிக்கும்.

அந்த வகையில், "பழங்களை புதைத்துவிட்டு, தரமான தவுன்களை எடுக்க 50 முதல் 70 நாள்கள் வரை காத்திருக்க வேண்டும்,"கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த போது தவன் குறித்து அறிந்தார்.

கரோனா பரவல் காரணமாக குற்றாலம் மற்றும் பிற சுற்றுலாத் தலங்களுக்கு 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் தவுன் விற்பனை பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நகரங்களுக்கு விற்பனைக்காக விற்பனையாளர்களும், சில விவசாயிகளும் தவுன்னை கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தவுன்னை விற்றால், தினமும் 2 வேளை எரிபொருளுக்காக செலவழித்து ரூ.400 முதல் ரூ.600 வரை வீட்டிற்கு கொண்டு செல்ல முடியும். மேலும் பனை விதையிலிருந்து எடுக்கப்படும் தவுன்களை ஓரிரு மணி நேரத்தில் விற்காவிட்டால் வீணாகிவிடும் என்றார்.

பனை ஓலையில் சுற்றப்பட்ட சுமார் 15 தவுன்களை 50 ரூபாய்க்கு விற்பனையாளர்கள் விற்பனை செய்கின்றனர்.

இதையும் படிங்க: மாலத்தீவில் கத்ரீனா கைஃப்!

ABOUT THE AUTHOR

...view details