ETV Bharat / sports

முதல் இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்திய போல்ட் - ஆவேஷ் கான்.. இறுதிப் போட்டிக்குள் நுழையப்போவது யார்? - SRH VS RR

author img

By PTI

Published : May 24, 2024, 9:50 PM IST

IPL Qualifier 2: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் குவாலிபையர் 2-ல் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 175 ரன்கள் எடுத்துள்ளது.

சஞ்சு சாம்சன் மற்றும் பேட் கம்மின்ஸ் புகைப்படம்
சஞ்சு சாம்சன் மற்றும் பேட் கம்மின்ஸ் புகைப்படம் (Credits: ETV Bharat Tamil Nadu)

சென்னை: ஐபிஎல் தொடரின் குவாலிபையர் 2 தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் குவாலிபையர் 1-ல் தோல்வி அடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், எலிமினேட்டரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களம் இறங்கினர்.

லீக் ஆட்டங்களில் அதிரடியாக விளையாடி வந்த இந்த கூட்டணி பிளே ஆஃப் சுற்றில் சோபிக்கவில்லை. அதேபோல், இப்போட்டியிலும் அபிஷேக் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் வந்த ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து எய்டன் மார்க்ரம் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் மூன்று விக்கெட்களையுமே டிரெண்ட் போல்ட் தான் வீழ்த்தினார். கடந்த இரு போட்டிகளிலுமே டக் அவுட் ஆன ஹெட், இப்போட்டியில் 34 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் ரன்கள் சேர்ந்தாலும், மறுபக்கம் விக்கெட்கள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. ஆவேஷ் கான் மற்றும் போல்ட் ராஜஸ்தான் அணியை முதல் இன்னிங்ஸ் முழுக்க ஆதிக்கம் செய்ய வைத்தனர்.

சிறப்பாக விளையாடி அரைசதம் எடுத்த கிளெசனும் சந்தீப் சர்மா பந்து வீச்சில் போல்ட் ஆனார். இறுதியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆவேஷ் கான் மற்றும் டிரெண்ட் போல்ட் தலா 3 விக்கெட்களும், சந்தீப் சர்மா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகின்றனர். மேலும், இப்போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இளையராஜாவை வம்புக்கு இழுத்த ராஜஸ்தான் ராயல்ஸ்... இணையத்தில் வைரலாகும் வீடியோ! - RR Team Kanmani Anbodu Kadhalan

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.