தமிழ்நாடு

tamil nadu

மயிலாடுதுறை தனி மாவட்டம் - பாதையாத்திரை சென்று நூதன போராட்டம்!

By

Published : Aug 27, 2019, 4:27 PM IST

பாதையாத்திரை செல்லும் மக்கள்

நாகப்பட்டினம்: மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி நான்கு திசைகளிலிருந்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி பாதை யாத்திரையாக சென்று மக்கள் மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தொடர்ந்து போராட்டங்கள் நடந்துவருகின்றன.

பாதையாத்திரை சென்று மனு கொடுத்த மக்கள்.

இந்நிலையில் வணிகர்கள், விவசாய அமைப்புகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு, நான்கு திசைகளிலிருந்து மேளதாளத்துடன் பாதயாத்திரையை தொடங்கினர்.

குத்தாலம் கடைத்தெருவில் கோமல் அன்பரசன் தலைமையில் தொடங்கிய இந்த பாதயாத்திரை மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி சென்றது. அதேபோல, வைத்தீஸ்வரன் கோவில், செம்பனார்கோவில், மங்கைநல்லூர் உள்ளிட்ட நான்கு திசைகளிலிருந்தும் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி பாதயாத்திரையாக வந்தனர்.

இறுதியில் மயிலாடுதுறையில் அனைத்து அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பின்பு, மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.

Intro:மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கக் கோரி நான்கு திசைகளிலிருந்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி பாதையாத்திரை பயணம்:-Body:மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக தொடர்ந்து போராட்டங்கள் வலுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் வணிகர்கள் விவசாய அமைப்புகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் நான்கு திசைகளிலிருந்து பாத யாத்திரை பயணத்தை தொடங்கினர். குத்தாலம் கடைத்தெருவில் கோமல் அன்பரசன் தலைமையில் மேளதாளத்துடன் பாதயாத்திரையாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் நோக்கி செல்கின்றர். அதேபோல வைத்தீஸ்வரன் கோவில், செம்பனார்கோவில், மங்கைநல்லூர் உள்ளிட்ட நான்கு திசைகளிலிருந்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் நோக்கி பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர். இறுதியில் மயிலாடுதுறையில் அனைத்து அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.


பேட்டி : கோமல் அன்பரசன்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details