தமிழ்நாடு

tamil nadu

முதியோர் இல்லத்தில் 15 நாட்கள் சேவை... ஜாமின் கேட்டவருக்கு நீதிமன்றம் உத்தரவு

By

Published : Dec 3, 2022, 9:53 AM IST

ஜாமின் கேட்ட கொலை குற்றவாளிக்கு முதியோர் இல்லத்தில் சேவை செய்ய நீதிபதி உத்தரவு
ஜாமின் கேட்ட கொலை குற்றவாளிக்கு முதியோர் இல்லத்தில் சேவை செய்ய நீதிபதி உத்தரவு ()

கொலை வழக்கில் கைதாதி சிறையில் உள்ளவர் தாக்கல் செய்திருந்த ஜாமின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை நீதிமன்றம், முதியோர் இல்லத்தில் 15 நாட்கள் சேவை செய்ய உத்தரவிட்டுள்ளது.

மதுரை: ஊமச்சிகுளம் அருகே நடைபெற்ற கொலை சம்பவம் தொடர்பாக சஞ்சய் என்கிற வெள்ளை சஞ்சய் என்பவரை ஒத்தக்கடை காவல் நிலைய போலீசார் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் சஞ்சய் தன்னை நீதிமன்ற காவலில் இருந்து ஜாமினில் விடுவிக்க மதுரை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இம்மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், காவல்துறை சஞ்சய் கொலை குற்றவாளி என்பதாலும், மேலும் பல வழக்குகளில் ஏற்கனவே ஜாமினில் உள்ளார் என்பதாலும் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உத்தங்குடியில் உள்ள ரோஜாவனம் முதியோர் இல்லத்தில் டிசம்பர் 16ஆம் தேதி வரை 15 நாட்கள் நாள்தோறும் 2 மணி நேரம் முதியோர் இல்ல இயக்குனர் உத்தரவிடும் அனைத்து வேலைகளையும் செய்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க: மதுரை தமுக்கம் மைதானத்திற்கு மீண்டும் சங்கரதாஸ் சுவாமிகள் பெயர் வைக்க கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details