தமிழ்நாடு

tamil nadu

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3pm

By

Published : Sep 27, 2020, 3:10 PM IST

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-3pmtop-10-news-at-3pm
top-10-news-at-3pm

  • மனதின் குரல் உரையில் வில்லுப்பாட்டை புகழ்ந்த பிரதமர் மோடி!

தமிழ்நாட்டில் பாரம்பரியமான கலைகளில் ஒன்றான வில்லுப்பாட்டு மிகவும் பிரபலமடைந்தது என மன் கி பாத் உரையில் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

  • பாடகர் எஸ்பிபி-க்கு பாரத ரத்னா - கங்கை அமரன் நம்பிக்கை!

தஞ்சாவூரில் தமிழ் மொழியில் ஹரிஹராசனம் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் குறுந்தகடு வெளியிட்ட இசையமைப்பாளர் கங்கை அமரன், பாடகர் எஸ்பிபி மறைவு இசைத் துறைக்கு பேரிழப்பு என்று கூறினார். இவர் திறனை நாடு அறியும் என்பதால் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் எந்த சிக்கலும் ஏற்படாது. பாரத ரத்னா விருது வழங்கும் குழுவில் நானும் ஒரு உறுப்பினர் என்பதால், மறைந்த பாடகர் பாலசுப்பிரமணியத்துக்கு அதனை வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

  • இந்திய - ஜப்பானின் கடலோர காவல் படையின் கூட்டுப்பயிற்சி காணொலி!

வட அரேபிய கடலோரப் பகுதியில் இந்தியா - ஜப்பான் நாடுகளின் கடலோர காவல் படையின் கூட்டுப்பயிற்சி நடைபெற்று வருகிறது. நேற்று (செப்டம்பர் 26) தொடங்கிய இந்த கூட்டுப்பயிற்சி நாளை (செப்டம்பர் 28) வரை நடைபெறுகிறது. இதில் ஜப்பான் போர்க்கப்பல்களுடன் இந்திய நாட்டு சார்பில் ஐ.என்.எஸ் சென்னை, ஐ.என்.எஸ் தர்காஷ், ஐ.என்.எஸ் தீபக் உள்ளிட்ட போர்க்கப்பல்கள் பங்கேற்றுள்ளன.

  • சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கரோனா!

சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • மண்ணெண்ணெய் விலை உயர்வுக்கு காரணம் மத்திய அரசுதான் - அமைச்சர் செல்லூர் ராஜு

வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்க வந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

  • வேலூரில் 142 பேருக்கு கரோனா தொற்று உறுதி !

வேலூர் மாவட்டத்தில் இன்று (செப் 27) 142 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,624ஆக உயர்ந்துள்ளது

  • ஐஐடிகளில் சேர நடைபெற்றுவரும் ஜே.இ.இ தேர்வு!

இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர ஜே.இ.இ இரண்டாம் கட்ட பிராதான தேர்வு நாடு முழுவதும் இன்று (செப் 27) ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது.

  • பாலிவுட்டில் போதைப் பொருள் வழக்கில் 18 பேர் கைது!

பாலிவுட்டில் போதைப் பொருள் தொடர்புடைய வழக்கில் இதுவரை 18 பேரை கைது செய்துள்ளதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

  • நிபந்தனை பிணை உத்தரவை மீறி கொலை; குற்றவாளிக்கு பிறப்பித்த ஆணை ரத்து!

நிபந்தனை பிணை உத்தரவுகளை மீறிய குற்றவாளிக்கு, ஜார்ஜ் டவுன் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிணை ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

  • குறைந்த விலைக்கு கைப்பேசி; ஓ.எல்.எக்ஸ் மோசடி செய்து சிக்கிய இளைஞர்!

குறைந்த விலைக்கு கைபேசி வழங்குவதாக ஓ.எல்.எக்ஸ் இணையதளத்தில் இளைஞர் ஒருவர் விளம்பரம் செய்துள்ளார். இதனைக்கண்டு தன் பணத்தைப் பறிகொடுத்தவர் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், விளம்பரம் செய்த இளைஞரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details