ETV Bharat / bharat

மனதின் குரல் உரையில் வில்லுப்பாட்டை புகழ்ந்த பிரதமர் மோடி!

author img

By

Published : Sep 27, 2020, 2:50 PM IST

டெல்லி:தமிழ்நாட்டில் பாரம்பரியமான கலைகளில் ஒன்றான வில்லுப்பாட்டு மிகவும் பிரபலமடைந்தது என மன் கி பாத் உரையில் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

pm narendra modi
pm narendra modi

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்றும் பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலி வாயிலாக மனதின் குரல் (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியில் பேசுவது வழக்கம். அதேபோல் இன்று தனது 69ஆவது மன் கி பாத் வாணொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் காலை 11 மணி அளவில் உரையாற்றினார்.

அப்போது பேசியவர், "கதை சொல்லும் பாரம்பரியம் கொண்ட இந்திய நாட்டில், நம் பாரம்பரிய கதைகளைக் கூறி அதனை அதிகளவில் பொக்கிஷம் போல் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு கடத்தி வரும் கிராமப்புற மக்களுக்கு ஒரு பெரும் பங்குண்டு. ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகளுக்கு கதை சொல்லும் பழகத்தை பெற்றோர் பழக வேண்டும்.

மன் கி பாத் உரையில் வில்லுப்பாட்டை புகழ்ந்த பிரதமர் மோடி!

குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் வாரம் ஒரு நபர் வீதம் குடும்ப உறுப்பினர்களுக்கு கதைகள் சொல்லி மகிழலாம். கரோனா குடும்பங்களை ஒன்றாக இணைத்துள்ளது. நமது கிராமங்களின் கதைகளை குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.

அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் இசையுடன் கலந்து புராணம் உள்ளிட்ட கதைகள் வாயிலாக பாடப்படும் வில்லுப்பாட்டு மிகவும் பிரபலமானது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வித்யா என்பவர் வில்லுப்பாட்டை புராண கதைகள் மூலம் கூறுவது வரவேற்கத்தக்கது" என்றார்.

இதையும் பாருங்கள்: மன் கி பாத்தில் மக்களுடன் பேசும் பிரதமர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.