ETV Bharat / state

ஐஐடிகளில் சேர நடைபெற்றுவரும் ஜே.இ.இ தேர்வு!

author img

By

Published : Sep 27, 2020, 2:57 PM IST

இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர ஜே.இ.இ இரண்டாம் கட்ட பிராதான தேர்வு நாடு முழுவதும் இன்று (செப் 27) ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது.

ஜே.இ.இ தேர்வு
ஜே.இ.இ தேர்வு

சென்னை: மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) சேர்வதற்கான ஜே.இ.இ பிராதான தேர்வு இன்று (செப் 27) நடந்து வருகிறது.

இந்தியாவில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர ஜே.இ.இ தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். அந்த வகையில், ஜே.இ.இ. முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதில் தேர்வாகும் மாணவர்களே மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.

இந்த ஆண்டுக்கான ஜே.இ.இ. முதன்மை தேர்வு கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் 10 லட்சத்து 66 ஆயிரம் பேர் பதிவு செய்திருந்தனர். இவர்களில் 10 லட்சத்து 23 ஆயிரம் மாணவர்கள் தேர்வினை எழுதினர். அவர்களுக்கான தேர்வு முடிவுகள் செப்டம்பர் 11ஆம் தேதி வெளியிடப்பட்டது.

முதன்மை தேர்வுகளில் வெற்றி பெறும் தேர்வர்கள் ஜே.இ.இ. பிராதான தேர்வை எழுத தகுதிபெறுவார்கள். அதன்படி, முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பிராதான தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இந்த தேர்வில் தகுதிபெறும் மாணவர்களே இந்தியாவில் உள்ள ஐ.ஐ.டிகளில் சேர முடியும். இந்த இரண்டாம் கட்ட பிராதான தேர்வு நாடு முழுவதும் இன்று (செப் 27) ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் 222 நகரங்களில் 1,000 மையங்களில் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை ஒரு லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர். இந்நிலையில், காலையில் முதல்தாள் முடிவுற்று பிற்பகலில் இரண்டாம் தாள் தேர்வும் நடைபெற்று வருகிறது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இதையும் படிங்க: சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.