ETV Bharat / bharat

பாலிவுட்டில் போதைப் பொருள் வழக்கில் 18 பேர் கைது!

author img

By

Published : Sep 27, 2020, 12:09 PM IST

மும்பை: பாலிவுட்டில் போதைப் பொருள் தொடர்புடைய வழக்கில் இதுவரை 18 பேரை கைது செய்துள்ளதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

ncb
ncb

பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் பலர் தங்கள் கலந்துககொண்ட விருந்துகளில் போதைப் பொருட்களை உபயோகித்ததாக வந்த அதிர்ச்சி தகவலை அடுத்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவான என்சிபி வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து அடுத்தடுத்து பாலிவுட் பிரமுகர்கள் பலரை விசாரித்தும் கைதும் செய்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, ஷ்ரதா கபூர், சாரா அலி கான், தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்திய என்சிபி அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கிறது. மேலும் தர்மா புரொடக்ஷனஸ் நிறுவனத்தின் செயல் அலுவலர் கிஷிஜித் ரவி பிரசாத்தை கைது செய்துள்ளது. கிஷிஜித் உட்பட இதுவரை 18 பேரை கைது செய்துள்ளதாக என்சிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பண மோசடி வழக்கை விசாரித்துவரும் அமலாக்கத்துறையின் அறிவுறுத்தலை அடுத்து என்சிபி போதைப் பொருள் தொடர்பாக வழக்குப் பதிந்து பாலிவுட்டில் பல முக்கிய பிரமுகர்கள், நடிகர்களை விசாரணை நடத்த முன்வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நான் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தேன் - கங்கனாவின் வைரல் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.