தமிழ்நாடு

tamil nadu

பெங்களூரு டூ சென்னை: கொரியரில் வந்த 1 டன் எடையுள்ள குட்கா!

By

Published : Sep 2, 2021, 6:16 AM IST

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கொரியரில் அனுப்பப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

gutka
gutka

சென்னை: பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கொரியரில் அனுப்பப்பட்ட ஒரு டன் குட்கா, பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் குட்கா, புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்டு இருந்து வரும் நிலையில், வெளி மாலத்தில் இருந்து சென்னைக்கு குட்கா பொருட்களை கடத்தி வருபவர்களை காவல்துறையினர் கண்காணித்து கைது செய்து வருகின்றனர்.

லாரி, லோடு வாகனம் மூலம் தமிழ்நாட்டிற்கு குட்கா, புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படும் நிலையில், தற்போது புது விதமாக கொரியரில் குட்கா பொருள்கள் கடத்தப்படுகின்றன.

அவ்வாறு கொண்டுவரப்படும் பர்சல்கள், சென்னை தேனாம்பேட்டை பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்யப்பட உள்ளதாக, தி.நகர் துணை ஆணையர் ரகசியத்தகவல் வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, அவர் தலைமையிலான தனிப்படை காவலர்கள் அண்ணா சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியார் கொரியர் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கொரியர் மூலம் பெங்களூரில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டு, கடைகளுக்கு பிரித்துக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 1 டன் குட்கா பொருட்களை வாகனத்துடன் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும், பர்சல் நிறுவன மேலாளர் மாரீசன் உட்பட 3 பேரை தேனாம்பேட்டை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல மடிப்பாக்கம்- வேளச்சேரி பகுதிகளில், கொரியர் சேவையை பயன்படுத்தி, கொண்டுவரப்பட்ட 300 கிலோ குட்கா, புகையிலை பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

ஒரே நாளில் 1 டன் குட்கா பொருட்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வெளி மாநிலங்களில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்தது தொடர்பாகவும், விற்பனை செய்ததாகவும் சுமார் 175 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 200 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGGED:

Gutka seized

ABOUT THE AUTHOR

...view details