தமிழ்நாடு

tamil nadu

நடுவானில் சக பயணியை இருமுறை காப்பாற்றிய பிரிட்டிஷ் இந்தியர்

By

Published : Jan 7, 2023, 10:05 AM IST

Updated : Jan 7, 2023, 1:25 PM IST

நடுவானில் சக பயணியை இருமுறை காப்பாற்றிய பிரிட்டிஷ் இந்திய மருத்துவர்!
நடுவானில் சக பயணியை இருமுறை காப்பாற்றிய பிரிட்டிஷ் இந்திய மருத்துவர்!

லண்டனில் இருந்து பெங்களூருக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த சக பயணியின் உயிரை, பிரிட்டிஷ் இந்திய மருத்துவர் இரண்டு முறை காப்பாற்றியுள்ளார்.

லண்டனில் உள்ள பர்மிங்ஹாம் குயின் எலிசபெத் மருத்துவமனையில் கல்லீரல் நிபுணராக விஸ்வராஜ் வெமலா (48) என்பவர் பணிபுரிந்துவருகிறார். பிரிட்ஷஸ் இந்தியரான இவர் லண்டனில் இருந்து பெங்களூருக்கு செல்லும் ஏர் இந்தியா (AI 128) விமானத்தில் தனது தாயாருடன் பயணம் மேற்கொண்டிருந்தார்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, சக பயணி ஒருவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த விமான பணியாளர்கள் மருத்துவரை தேடிக் கொண்டிருந்தனர். இதனிடையே மருத்துவர் வெமலா, சக பயணியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

அப்போது விமானத்தில் இருந்த மருத்துவ உபகரணங்களை வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினார். நீண்ட போராட்டத்துக்கு பிறகு சக பயணி மூச்சுத்திணறலில் இருந்து மீட்கப்பட்டார். இதனையடுத்து சற்று நிதானம் அடைந்த பயணிகள் மீண்டும் பரபரப்பாகினர். ஏனென்றால் அதே பயணிக்கு மீண்டும் அதிகமான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவர் வெமலா, மீண்டும் சிகிச்சையைத் தொடங்கினார்.

அதற்குள் மும்பை விமான நிலையத்தில் மருத்துவர் குழு தயாராக இருந்தது. இந்த நிலையில் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, சக பயணியின் உடல்நிலை சீரானது. இதனால் மருத்துவ சிகிச்சை வேண்டாம் என்று பயணி மறுத்துள்ளார். இருப்பினும் சிகிச்சை அவசியம் என்பதை மருத்துவர் வெமலா உணர்த்தியுள்ளார். எனவே மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், சிகிச்சைக்காக பாதிக்கப்பட்ட பயணி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதுகுறித்து மருத்துவர் வெமலா கூறுகையில், “நான் சக பயணி காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கினேன். விமானத்தில் இருந்த மருத்துவ உபகரணங்கள் பயனுள்ளவையாக இருந்தன. அதன்காரணமாக என்னால் அவரை காப்பாற்ற முடிந்தது. இந்த தருணத்தை நான் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். ஏனென்றால், எனது மருத்துவத்தை 7 ஆண்டுகளில் என்னுடைய அம்மா அப்போதுதான் முதன்முறையாக நேரில் பார்த்தார். சக பயணிகளும் பாராட்டினர்” என நெகிழ்ந்தார்.

இதையும் படிங்க:கரோனாவால் ஆண்மை குறையுமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Last Updated :Jan 7, 2023, 1:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details